மனம் எனும் மாயப் பேய்: ரா.பார்த்தசாரதி


ஆறறிவு படைத்தவனுக்கு மனதையும், குணத்தையும் வைத்தான்
அவன் குடிக்கும் போது மனதையும், குணத்தையும் இழக்கின்றான்
குடியானது அறிவையும், ஆற்றலையும் மழுங்கச் செய்யும்
மனம் எனும் பேய் அவனை பொம்மை போல ஆட்டிப்படைக்கும்
வாழ்க்கையில் நமது ஆயுள் போதாது தவறுகளை கண்டு திருந்த,
பட்டே திருந்தினாலும், கடைசி காலத்தில் பயனற்றுப்போவான்
நல்ல ஒழுக்கங்களை மனதிற் கொண்டு தீயவற்றை மற!
தீயவர்களை கண்டால் ஒதுங்கி இருப்பதே நல்லதென அறி !
மனம் ஒரு குரங்கு, மனித மனம் ஒரு குரங்கு என்றான் கவிஞ்சன்
அதனை தாவ விட்டால் மனம் ஒரு நிலை படாமல் இருக்கும்
கட்டுப்பாடு என்ற பெயரில் ஒரு தீமையிலிருந்து வெளிப்பட
மற்றொரு தீமைக்கு மனிதன் மனம் தாவக் கூடாது
மது, மாது, சூதாட்டம் இவை மூன்றும் மனிதனுக்கு கெடுதலாகும்
இம்மூன்றையும் கொண்டவன் வாழ்வு சீர்கெட்டு அழியும்
அவன் மட்டுமன்றி அவனது குடும்பமும் சிதலமடையும்
தூண்டில் புழுவில் மீன் போல் வாழ்க்கை தத்தளிக்கும் !
மனம் செம்மையுற மனவள கலைகள் எங்கும் நடத்தப்படுகிறது
யோகக் கலையும், மனவள கலைகளும் மனதை தூய்மையாக்கும்
உணவு கட்டுப்பாடு உடலையும், ஆரோகியத்தையும் மேம்படுத்தும்
மனக் கட்டுப்பாடு அறிவையும், இதயத்தையும் வளப்படுத்தும் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...