மனம் எனும் மாயப் பேய்: ம. அஹமது நவ்ரோஸ் பேகம்


ஆண்டி முதல் அரசன் வரை,
சாமானியன் முதல் சித்தர் வரை
அனைவரையும் பேதமின்றிப்
பாடாய்ப் படுத்தும் !
வெப்பமானி, பாரமானி என
எத்தனையோ கருவிகள் எதை,
எதையோ அளப்பதற்கு இருந்தாலும்,
மணிக்கு எத்தனை கிலோமீட்டர்
வேண்டுமானாலும் ஓடும், பறக்கும், தாவும்
மனதின் வேகத்தை அளப்பதற்கு
மனிதனால் எந்தக் கருவியையும்
கண்டு பிடிக்கவே முடியாது !
தீதும், நன்றும் பிறர் தர வாரா
என்பது மனதிற்கே சொல்லப்பட்டதோ?
தீயன வேண்டாம், அடங்கு
என்றால் அடங்காது !
நல்லன செய்வதற்கு அஞ்சாதே,
என்றால் அடங்கும், மனதின் விசித்திரம்
மனிதர்களைப் பாதாளத்தில் தள்ளும்
மனம் எனும் மாயப் பேயின் தந்திரம் !
மனதை அடக்கியோர் ஞானிகளானர்.
அடங்கியோர் நஷ்டமடைந்தனர்.
அறிவு என்னும் கடிவாளம் கொண்டு
மனம் என்னும் மாயப் பேயை அடக்குவோர்
ஈருலகிலும் வெற்றி பெறுவர்!
கடிவாளம் தவற விடுவோருக்கு
எவ்வுலகிலும், என்றுமே தோல்விதான் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...