/

மனம் எனும் மாயப் பேய்: அழகூர். அருண். ஞானசேகரன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

மனமதுவோர்   பேயென்றாக   மாட்சி்கெட்டுப்   போகும்           மாண்பழியக்   காண்பதுவும்   மடமையேன்றே   ஆகும் !கணவுதனைக்   காண்பதிலே   தவறேதும்   இல்லை           கண்ணியமே   மிக்கதென   கவலைகளும்   இல்லை !தனக்கென்றும்    பொருந்தாதக்   கனவுகளைக்   கண்டு           தார்மீக    நன்னெறியை    மறந்திட்டு   வாழ்வில்வினயமதை   மீறுவதும்   பழியேற்கத்   தானோ           வேண்டுவதோ   இன்னதுவும் ?   நீங்காப்பழி  தானே !ஒருதலைக்   காதல்கொண்டு   அலைகின்றக்   கூட்டம்           ஊரெங்கும்   இருப்பதனைக்   காண்கின்றோம்   இன்று !தறுதலைகள்   கனவுலகில்   மிதக்கின்றப்   போதில்           தகுதிக்கும்   நிலைமைக்கும்   பொருந்தாத   வகையில்விருப்பமிலா   மங்கையர்கள்   பின்னாலே   சுற்றி           வெம்பி  மனந்தளர்ந்து  கொலைதனையும்  செய்வார் !மறுக்காமல்   இவர்கள்தமைத்   தூக்கிலிட   வேண்டும் ,           மனமதுவும்   பேயானோர்   மரிக்கத்தான்   வேண்டும் !காண்பதெலாம்  நமக்கென்றே   கருதுகின்ற   நெஞ்சம்           கண்ணியமே   இல்லார்க்கே !   அவர்களுக்கோ   பஞ்சம் ?வேண்டியவை   அனைத்துமே   இருந்திட்டப்   போதும்           வேட்டைக்கா   டென்றாகக்   கொள்ளையிட்டப்   பின்னும்மீண்டும்வாக்கைப்   பெற்றுய்ய   வருக்கின்றப்   போதில்           மேலான   மதிக்கொண்டு   மறுக்கத்தான்   வேண்டும் !மாண்பில்லார்   நமையாளக்   காண்பதுவும்  சரியோ ,             மனமதுவும்   பேயானோர்   மன்றமாளத்   தகுமோ ?கனவுலகில்   வாழ்ந்திட்டுக்   கண்டதெல்லாம் வேண்டுமெனும்வினயமற்ற   எண்ணமதால்   வேதனையே !  ---  மனதினிலேதீயபல   எண்ணங்கள்   திரண்டதனில்   வந்தடையமாயப்பேய்   என்றாகும்   மனம் !மனமென்னும்   மாயப்பேய்   தனையடக்க   வேண்டும்           மாண்பதுவும்   மாட்சியதும்   வேண்டுமெனும்   போதில் !தினவெடுக்கும்   உணர்வுகளை   கிளர்ந்தெழச்   செய்யும்           தீர்க்கமிலா   செயலதனைச்   செய்திடவும்   தூண்டும் !உனதுமனம்   போராடும்   எண்ணங்கொண்டப்   போதும்           ஓய்ந்துவிடும்   விரைவினிலே  மாயப்பேய்   முன்னம் !கனவினிலும்   மாயப்பேய்   வென்றிடுதல்   தகுமோ,           கண்ணியமும்   காற்றினிலே  பறப்பதுவும்   முறையோ?               

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.