/

மனமென்னும் மாயப் பேய்: தகடூர் செவ்வியன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

மனம் ஒரு குரங்காம்
யார் சொன்னது குரங்கு
மரத்திற்கு மரம் மட்டுமே தாவும்... 

மனமோ தாவும் எல்லை
மந்திரத்தானும் இல்லை!
நேற்று அவளைக் கண்டேன்.

இவள் தானோ அவளும் (தீய ஆசை) 
இவள் வேறு ஒருத்தி இருந்தால் என்ன
இவளும் எனக்கானவள் தான்...

மனசாட்சியைக் கேட்டுப்பார்!
அப்படியென்றால் - அதற்கு
ஏதையா சாட்சியமும் சம்பிரதாயமும்...

பேயை நேரில் கண்டவர்கள் உண்டாம்
ஆம் யார் அவர்கள் தேடிப்பார்தேன்
ஆளுக்கொரு கதை மனம்போன

போக்கில் கூறினர் பாவம் அவர்களின்
மனமே ஒரு மாயப் பேய் என்பதை
அறியாப் பேதையர்... 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.