பொம்மைகள்: "நெய்வேலி - தேன்ராஜா'


பொம்மைகள்
முன்பெல்லாம்
அரசவையில்
மன்னன் கொலுவீற்றி
இருந்தான் என்பார்கள்...
இப்போது ஆட்சி
புரிவதெல்லாம் கொலு
பொம்மைகள்தாம் ....
இப்போதெல்லாம்
சட்டசபைகளிலும்,
பாராளுமன்றத்திலும்
அமர்ந்திருப்பவையெல்லாம்
சோளக்கொல்லை
பொம்மைகள்தாம்....
ஊழல் செய்யும்
அரசியல்வாதிகள்
யாவரும்
எப்போதும்
கொடும்பாவி
பொம்மைகள்தாம்......
தலைமையை
எதிர்த்து
நியாயத்தை கூட
கேட்கமுடியாத
அனைவருமே
தலையாட்டி
பொம்மைகள்தாம்.......
நவராத்திரியில்
மட்டும்
அலங்காரமாய்
அமர்ந்திருக்கும்
அழகு
பொம்மைகள்....
அர்த்தராத்திரியில்
கூட
அதிகாரக்குடை
பிடிக்கும்
இந்த அரசியல்வாதி
பொம்மைகள் ......
முன்பெல்லாம்
அரசவையில்
மன்னன் கொலுவீற்றி
இருந்தான் என்பார்கள்...
இப்போது ஆட்சி
புரிவதெல்லாம் கொலு
பொம்மைகள்தாம் ....
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...