பொம்மைகள்: கே.நடராஜன்


மண் பொம்மை மர பொம்மை
நாங்க எல்லாம் இன்று
உங்க வீட்டு கொலு படியில் ...
எந்த படியாய் இருந்தாலும்
எப்படியும் ஒரு இடம் உண்டு
எங்களுக்கு உங்க வீட்டு கொலு படியில்...
பேசா பொம்மை நாங்க என்று
நீங்க நினைத்தாலும் நாங்க
பேசிக்கொண்டேதான் இருப்போம்
எங்களுக்குள் கொலு படியில்!
பேசும் மனிதர் நீங்கதான்
இப்போ பொம்மை மாதிரி !
அலை பேசியும் கையுமாய்
அலையும் நீங்க பேசுவது
அதனுடன் மட்டுமே !
உங்க குழந்தை கையில்
கூட ஒரு அலை பேசி இப்போ !
கையில் அலை பேசி
இல்லாத நேரம் உங்களுக்கு
மௌன விரதம்
மடிக்கணினியுடன் மணிக் கணக்காக !
பொம்மை எங்களை "ரோபோ "வாக
பேசவைத்து வேலையும் செய்ய வைக்கும்
சாதனை செய்யும் நீங்க
உங்க வீட்டில் உங்களுக்குள் பேச்சை
குறைத்து சொந்த பந்தம்
தொலைப்பது ஒரு பெரும் வேதனை !
பொம்மைகள் நாங்க காத்திருக்கிறோம்
உங்களை எல்லாம்
கொலு படியில் பொம்மைகளாக
உட்காரவைக்கும் ஒரு காலத்துக்கு !
காலம் மாறும் நிச்சயம் !...
காட்சியும் மாறும் அச்சமயம் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...