/

பொம்மைகள்: -கோ. மன்றவாணன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

நாளை கொலு கொண்டாடஅட்டைப் பெட்டிகளில்அடைத்து வைக்கப்பட்டிருந்தபொம்மைகளைப்பொறுமையாக எடுத்தாள்அழகு பார்த்துக்கொலுமேடையில்வைத்தாள்கொண்டு வந்தாள்கைலாயத்தைநடுவீட்டில்கோபியரோடு கொஞ்சும்கோகுலத்துக் கண்ணனின்காதல்வனத்தைகண்காட்சிக்கு வைத்தாள்தொப்பை செட்டியாரின்மளிகைக் கடையில்வண்ணவண்ணக் கூடைகளில்வகைவகையான பண்டங்கள்ஆனால்ஈக்கள் மொய்க்கவில்லைகல்யாண ஊர்வலம் பாருமாப்பிள்ளையும் பெண்ணையும் பாருஎனப் பாட்டிசைத்துமேள தாளம்நாதஸ்வரம் எனநகர்ந்து வரும்இசைவாசிகளின்விதவிதமானமுக பாவங்கள்பெட்ரோமாக்ஸ் லைட்தூக்கி வரும் மீசைக்காரர்கள்பாயும் குதிரைகள் பூட்டியபல்லக்கு வண்டியில்மாப்பிள்ளையும் பெண்ணும்எனஅமைத்து மகிழ்ந்தவள்கடைசியாகக்கல்யாண மேடை அமைத்தாள்ஐயர் மந்திரம் ஓதஉற்றோர் பெற்றோர் சூழநாதஸ்வரக்காரர், தவில்காரர்,ஒத்து ஊதுபவர் முதலியோர்ஜமக்காளத்தில் அமர்ந்தபடிஜமாய்க்கமணப்பெண்ணுக்குத் தாலி கட்டும்மாப்பிள்ளை பொம்மையை எடுத்தபோதுஅதுகைதவறி உடைந்து நொறுங்கியது…..அந்தமுதிர்கன்னியின்மனத்தைப் போலவே!சோதிடம்சொல்லுமோசுடுமண் பொம்மைகளும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.