எழுத்து: - வேலூர். மூ.மோகன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

விரல் பிடித்து அம்மா'விஜயதசமி'யில் பழக்கிய'அ' எனும் முதலெழுத்துஅழியாத பசுமையாய்...ஆயிரம் கதை பேசும்அற்புத உயிரெழுத்து!பருவத்தின் வாசலில் எழில்கொஞ்சும் சிலை அவளைக்கண்ட கணத்தில் தடுமாறிபட்டாம்பூச்சியாய் மனம்படபடக்கும் காரணம்'நீ' எனும் மந்திர எழுத்து!காதல் மெல்லக் கனிந்துகைபிடிக்கும் தருணம்வேதம் ஓதும் அந்தணர்வளர்க்கும் ஓமகுண்டத்திலும்வந்து நின்று கொழுந்துவிடும்'தீ' எனும் சுடும் எழுத்து!புது வாரிசு உருவாகிபூலோகந்தனைக் காணபுறப்படும் அந்த நிமிடம்சிசுவின் சின்னக் குரலில்சந்தோசம் கொண்டுவரும்'ஙே' எனும் அழுகை எழுத்து!விதி முடிவை அறிவித்துவிண்ணுலகப் பயணத்துக்கு'விசா' எடுக்கச் சொல்லும்திகிலூட்டும் வித்தியாசதெருநாயின் ஊளையிலும்தொடரும் 'ஊ' எனும் எழுத்து!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...