/

எழுத்து: சசி எழில்மணி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

எண்ணும் எழுத்தும்​எல்லாமும் நானறியகல்விக்கண் திறக்கஅமுதூட்டிய அன்னையும்நடைபழகிய எந்தையும்பள்ளிக்கு அனுப்பினர்என்னுடன் பிறந்தோரும்மகிழ்ந்து வழியனுப்பினர்அறியாத வயதுகளில்அழுகையை மறக்கச்செய்துஅன்புடன் அரவணைத்துஆனந்தம் என்றெண்ணிவகுப்பெடுக்கும் ஆசிரியரும்அடம்பிடிக்கும் மனநிலையைஅன்பாலே மாற்றினர்கைபிடித்து எழுத்துக்களைஎழுதவே பழக்கினர்தாய்மொழி உணர்வுகளைமனத்துள்ளே ஊட்டினர்குழந்தைகள் யாவரையும்தன் பிள்ளையென்றே நினைத்தனர்ஆறில் தொடங்கியதுஇப்பொழுதும் தொடருதுவார்த்தைகளை வசமாக்கவளைக்கின்ற எழுத்துக்கள்தலைநிமிரச் செய்கின்றனஎன்னை சான்றோரிடம் சேர்க்கின்றனகாலத்தின் கோலங்கள்வரை(கலை)யும் எண்ணங்கள்தலைகீழ் போராட்டங்கள்வரிகளும் விடுகதையாய்இறைவன் எழுதிய எழுத்து

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.