/

எழுத்து: கவிஞர் " இளவல் " ஹரிஹரன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

எழுத்தொன்றே தெய்வமென எண்ணி வாழும்        எத்தனையோ மாந்தர்கள் இங்கே உண்டாம்,எழுத்ததனைத் தொழிலாகக் கொண்டு வாழ்வார்        இருப்பதுவோ வருமானம் இல்லா தென்பார்,எழுத்துக்கும் இயல்புக்கும் இடையே உள்ள         எண்ணற்ற வேறுபாடு மனிதர் நெஞ்சைஅழுத்தமாக உலகுக்கெ டுத்துக் காட்டும்.         அற்புதமாய்ப் படம்பிடிக்கும் அவனி யெங்கும்.கல்வெட்டில் பதிகின்ற எழுத்தோ என்றும்          காலத்தை, வரலாற்றைக் கண்முன் காட்டும்.எல்லோரும் அறிகின்ற வண்ணம் முன்னம்          இருந்தகதை நடந்தகதை எல்லாம் காட்டும்.சொல்லொன்று பொருளொன்றாய்ச் சொல்லும் எந்தச்          சுவையில்லா எழுத்தெல்லாம் காலந் தாண்டிநில்லாது தண்ணீரில் எழுதி னாற்போல்          நிலையின்றி மறைந்துவிடும் எழுத்தாய்ப் போகும்.கையெழுத்து நன்றாக இருந்திட் டாலே          கபாலத்தில் அயனெழுத்துச் சரியில் லாமல்செய்யபிழை போலதுவே இருக்கு மென்பார்.          சிந்திப்பீர் தலையெழுத்தைச் சீராய்ச் செய்யதெய்வமொன்றே துணையாகக் கொள்வீர் நல்ல          திசையெழுத்தாய் மந்திரச்சொல் துணையாய்ச் சொல்வீர்.வையகத்தில் வாழ்வதற்கு முறையாய்ச் சொல்லும்          வழியொன்றே நல்லெழுத்தை வசமாய்க் கொள்வீர்.ஓரெழுத்து மந்திரமே ஓங்கா ரந்தான்,         ஒருவாறு உயரெழுத்தாய் ஒப்பு விக்கும்ஈரெழுத்தில் 'சிவ'வென்றும் 'ராம' வென்றும்         எழுகின்ற மந்திரங்கள்  எழிலைக் கூட்டும்.பாரெங்கும் பரவிநிற்கும் 'சக்தி' என்று         பகர்கின்ற மூவெழுத்து மந்தி ரந்தான்.சீரெழுத்தாய் அஞ்செழுத்தும் எட்டெ ழுத்தும்        செம்மையாகும் மனமதனைச் சிந்திப் பீரே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.