எழுத்து: அழகூர். அருண். ஞானசேகரன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

எழுத்தெல்லாம் வார்தைகளின் கோவையாய் மட்டுமே இருப்பதும் சரி்தானோ ; இலக்கணம் ஏதுமின்றி அவையெல்லாம் அமைந்திட எழில்தனைக் கொண்டிடுமோ ? பழுதிலா எழுத்துக் கோவைகள் தனைதருவோர் பாவலர் என்றாகுவார்; பாவெனும் பெருமையை எழுத்துக்கள் கொண்டிடும் பவித்திர இலக்கணத்தால் ! ஒழுக்கத்தைக் கொள்ளாத விளையாட்டு ஏதேனும் உண்டாமோ உலகத்திலே ? உன்னத சட்டங்கள் தனைக்கொண்ட தெல்லாமும் உயிரோட்டம் தனைகொள்ளவே ! முழுமையாய் இலக்கணந் தனைகொண்டக் கவிகளே மூப்பின்றி என்றும்வாழும் , முன்னோர்கள் அன்றேநல் இலக்கணம் வகுத்ததும் முகப்பொலிவு தனைக்கூட்டவே !2. காலங்கள் பலப்பல கடந்திட்டும் அவைநிற்கக் காண்பதே சிறப்பல்லவோ ; கவிதைகள் என்றிட்ட தகுதியைப் பெற்றவை காலத்தை வென்றிடுமே ! கோலமே எனநாம் ஏற்பதும் எழில்தனைக் கொண்டிட்ட வரிகளைத்தான் ; குளரிடும் வகைதனில் இணைத்திட்டக் கோடுகள் கோலமே என்றாகுமோ ? ஞாலத்தில் தமிழ்கொண்டக் கவிதைகள் போலபல் நயமுற்றப் பாடல்களை நாமெந்த மொழிதனில் காண்கிரோம் ? இல்லையே! நம்தமிழ்ச் சிறப்பிதுவாம் ! ஆலதாய்த் தழைத்திட்டு தமிழ்மொழி உலகினில் அருகுபோல் படர்வதுவும் , அற்புத இலக்கணச் சிறப்பினால் என்பதை அறிந்திடல் வேண்டுமன்றோ ?3. இலக்கணம் மொழிக்கென்றும் இனிமையை ஊட்டிடும் எழில்தனைக் கூட்டுவிக்கும் ; எழிலெதும் இல்லாத எழுத்துக்கள் உரைநடை என்பதே சரியாகுமாம் ! பலப்பல காலமாய் இலக்கியம் வாழந்தி்டும் பாரினில் நிலைத்து நிற்கும் ;
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...