தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

பட்டதாரி: லூர்து எஸ் ராஜ்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

தந்தை பட்டாதாரி தலைமகன் நான் இன்று பட்டதாரிவிந்தையிது நிகழ்ந்த போதும் வேலையேதும் கிட்டவில்லை.பட்டாதாரி உழைப்பதனால் பலர்நாங்கள் உண்கின்றோம்‘பட்டதாரி என்னால் தான் பலமடங்கு செலவினமாம்’பகலெல்லாம் உழைக்கின்ற பட்டாதாரி யுடன்சேர்ந்துபழஞ்சேற்றில் கால்வைக்க படிப்பு தடுக்கிறது, கால்குழாயை சுருட்டி மடக்க கூனிக் குறுகுகிறேன்; நல்உழைப்பைப் பள்ளிக்கூடம்  சொல்லித் தரவில்லை.கல்லூரி தந்ததுவே கல்விஎன எண்ணி நானும்சொல்லாமல் கொள்ளாமல் சோம்பேறி ஆகிவிட்டேன்.அம்மாவின் பொறுமையும்  அப்பாவின் அனுபவமும்சும்மா வந்ததனால் சுயபடிப்பு ஆகாதோ?தந்தை யிடமிருந்து சரிபாதி நிலம்பெற்ற இன்றேபட்டதாரி நானுமொரு பட்டாதாரி ஆகிவிட்டேன்வெட்டி முறித்து வேலியை சீராக்கி விவசாயவேலையில் ஈடுபட விருப்பமுடன் முன்வந்தேன் .வேலையில்லா பட்டதாரிஎன வேறொருவர் சொல்லவேண்டாமே ; நிலத்தில் வேலையும் இருக்கின்றதுவேண்டிய விளைச்சல் வருகின்றது ; இன்றுநான்பட்டதாரி பட்டாதாரி ; பட்டாதாரி பட்டதாரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.