தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

பட்டதாரி:  கவிஞர் " இளவல் "  ஹரிஹரன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

தொடக்கநிலைப் பள்ளியிலே அகரம் கொண்டு
      தொடங்குகின்ற எழுத்துகளை வரிசை யாக
தடையிலாது பயின்றபடி தான்வ ளர்ந்து
      தமிழ்முதலாய் பிறமொழியும் பலவும் கற்று
முடங்கிடாமல் உயர்கல்வி மேலும் பெற்று
      முன்னேறும் ஆசையிலே கல்லூ ரிக்குள்
அடங்கிடாத மேல்நிலையில் பட்டம் வாங்கும்
      ஆர்வமுடன் பலகற்று அணிசெய் கின்றார்.

பட்டதாரி என்றுபோற்ற கவலை தீர
       படித்தபயன் சேர்வதற்கு வேலை தேடும்
கட்டமதை அடைகின்றார் மாண வர்கள்.
       கடினவுழைப் பதனாலே போட்டித் தேர்வை
இட்டமுடன் எதிர்கொண்டு வெற்றி காண
      இசைகின்றார் காலவெள்ளம் கரைத்துக் கொள்ள,
நட்டமிலா முயற்சிக்குத் துணையாய் நிற்கும்
       நம்பிக்கை யொன்றேதான் வழியைக் காட்டும்.

படித்தறியா மேதைகளும் உண்டு, பாரில்
      பட்டதாரி என்றுசொல்ல பெருமை கூடும்.
முடிவதுவோ கல்விக்கோ என்றும் இல்லை,
      முன்னேற்ற வாழ்விற்கோ அதுவே எல்லை,
அடிப்படையு ரிமையாக ஆகும் கல்வி
       அடித்தட்டு மக்களினை மேலு யர்த்தும்
கொடியொன்றே குடியாள வேண்டும், இங்கே
       கொண்டகல்வி வேலைதரும் நிலைகா ணட்டும்!

வணிகநோக்கில் பொருளாகிப் போன கல்வி
        வாங்குந்தி றன்கொண்ட மனிதர் வாழ்வின்
அணியாகிப் போனதனால் அவலந் தானே..
        அதைவாங்க முடியாத ஏழை மக்கட்
பிணியாகிப் போகலாமோ கல்வி, ஆயின்
        பிழையாகிப் போய்விடுமே சமுதா யத்தில்.
இனியென்ன விதிசெய்வோம் எல்லோ ருக்கும்
        எழுதுகல்வி பொதுவென்ற கொள்கை செய்வோம்!   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.