தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

பட்டாசுச் சத்தம்: அருள் .க.  இராபர்ட் 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

காலைக் கதிரவன் உதிக்கும் முன்னேகாகம் குருவி கிளிகளின் சத்தம்வேலைக்குச் செல்ல புறப்படவேண்டிவிழிப்பைக் கொடுக்கும் மணிப்பொறிச்சத்தம்பால்காரப்பையன் கீரைக்கிழவியின்பழகிப்போன பயங்கரச் சத்தம்காலைக்கடன்களை முடிக்கச்ச்சொல்லிகுழந்தையைத் திட்டும் மனைவியின் சத்தம்வண்டி வாகனம் வாய்மொழிப் பேச்சுவந்து  போகும் வழக்காறுச் சத்தம் நண்பன் பேச அவசரஅழைப்பாய்நாதமாய் அழைக்கும் கைபேசிச் சத்தம்அன்றும் இன்றும் என்றும்  இதுவேஅலுவல்போல தொடர்ந்திடும்வேளைதினமும் நடக்கும் நடைமுறை மாறிதிடீரென வெடித்த பட்டாசுச் சத்தம்எங்கும் இசையை பரப்பும் பறவைகள்ஏதோவிபத்தென அலறும் சத்தம்தூங்கும் குழந்தை துள்ளி எழுந்துதுடித்து கதறி அழுகும் சத்தம்தாங்கமுடியா நோயில் துடிக்கும்தாத்தாப் பாட்டியின் துயரின் சத்தம்தங்கியிருக்கும் மருத்துவமனையில்தவிக்கும் நோயாளி துடிக்கும் சத்தம்இத்தனை துயர் மிகு சத்தம் இருந்தும்தீபாவளியின்  பட்டாசுச் சத்தம்எத்தனை மகிழ்வைத் தந்திட்டபோதிலும் ஏதோ மனதில் நெருடும் சத்தம்நித்தம் நித்தம் மகிழ்வைத் தேடிநீண்டு வெடிக்கும் பட்டாசு ஒலியின்சத்தமே இல்லாத மத்தாப்பு ஒளியில்சந்திப்பதுதான் மகிழ்வின் சத்தம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.