பட்டாசு சத்தம்: பொன். குமார்


பயிர் காக்க போராடும்
விவசாயிகளின் குரலைக்
கேட்காமல் செய்து விடுகிறது
பட்டாசு சத்தம்.
உரிமைக்காக போராடும்
தொழிலாளர்களின் குரலை
ஒலிக்காமல் செய்து விடுகிறது
பட்டாசு சத்தம்.
மாநில முன்னேற்றத்திற்கு
மத்தியை நோக்கிய
தமிழர்களின் குரலைக்
காணாமல் செய்து விடுகிறது
பட்டாசு சத்தம்.
பசிக்காக ஏந்தி வாழும்
பிச்சைக் கார ர்களின் குரலை
அடக்கி விடுகிறது
பட்டாசு சத்தம்.
வெடித்தால் விபத்துண்டாகுமென
வேண்டுகோள் வைப்போரின்
கோரிக்கைக் குரலை
கேளிக்கையாகி விட்டது
பட்டாசு சத்தம்.
பட்டாசு சத்தத்தில்
காணாமல் போயின
பல குரல்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...