தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

பட்டாசு சத்தம்:  கவிஞர் " இளவல் " ஹரிஹரன்,

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

பட்டாசுச் சத்தத்தில் பகட்டி ருக்கும்​      பலபேரின் மகிழ்வதிலே இணைந்தி ருக்கும்கட்டாய அனுபவமாய் எல்லோ ருக்கும்      கண்முன்னே வெடிச்சத்தம் கேட்டி ருக்கும்தொட்டுத்தொ டாமலேயே தீக்கங் கொன்றை      தெருநடுவே ஊதியபடி வெடியின் மீதுபட்டுவிடும் அவசரமாய்ப் பதைப தைத்துப்      பட்டுவிடப் படீரென்று வெடிவெ டிக்கும்.சிறுவயதில் காசுசேர்த்து வெடிகள் பார்த்து       சீனிவெடி லட்சுமிவெ டிஅணு குண்டுசரவெடிகள் ஓலைவெடி ராக்கெட் என்று      தரம்தரமாய்ப் பார்த்துவாங்கி அக்கம் பக்கம்பிறவீட்டுச் சிறுவரோடு சேர்ந்து நண்பர்     பெருங்கூட்ட மாகநல்ல மகிழ்ச்சி யோடுபரபரப்பாய் வெடிக்கின்ற தருணம் கேட்கும்      பட்டாசுச் சத்தம்தான் கொள்ளை கொள்ளும்.பட்டாசுத் தொழிற்சாலை விபத்தில் சிக்கி      பலியாகும் உயிர்க்கிங்கு வருத்தம் சொல்லபட்டாசு ஆலைமுத லாளி கட்கு      பரிவான வார்த்தையிங்கு வருவ தில்லைபட்டாசு ஆலைவிதி பார்த்துச் செய்ய      பதவியிலே இருப்பவர்க்கோ மனமு மில்லைபட்டாசுச் சத்தத்தின் பின்னால் வாடும்      பரிதாப உயிரவலம் முடிவ தென்று!        

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.