பட்டாசு சத்தம் - கா. மகேந்திரபிரபு


பட்டாசு நகர் சிவகாசி -தருமே
பாருக்கெல்லாம் பட்டாசுகளை !
தொழில் புரட்சி - உலகம் வியக்க
குட்டி ஜப்பான் - நேரு சொன்னது !
தீபாவளி - பட்டாசு சத்தம்
திரும்பிய பக்கமெல்லாம் சத்தம் - பட்டாசு சத்தம்
தீமை இருள் நீங்க
தீபஒளி ஒளிக்கட்டுமே
அமைதி களைய வேண்டும்
பட்டாசு சத்தம் ஒலிக்கட்டுமே
இனிப்புகள் பரிமாற - அன்பு !
இன்ப வெள்ளமாய் - காதல்
தலை தீபாவளி காணும்
தம்பதிகளுக்கு பட்டாசு சத்தம் !
பறவைகளுக்கு கிழவிகளுக்கும்
பிறந்த குழந்தைகளுக்கும்
பட்டாசு சத்தம் வேட்டு சத்தம் பட
படப்பைத் தரும் பட்டாசு ஒலி !
இல்லங்களில் மாற்றம் காண
இனிமை சேர வாழ்த்துக்கள் !
பட்டாசு சத்தம் கேட்போம்
பட்டாசு சத்தம் ஒலிக்கட்டுமே
பக்குவம் பிறக்க சத்தம் வேண்டும்
பட்டாசு சத்தம் பட்டாசு சத்தம் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...