தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

பட்டாசு சத்தம்: ரா.பார்த்தசாரதி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

மக்களுக்கு  மகிழ்ச்சியும், ஆனந்தமும்  நிறைந்த பண்டிகை,எல்லோரும்,  ஒன்றுகூடி , மகிழ்ச்சியுடன்  கொண்டாடும் பண்டிகைவாழ்த்துகளை, நாம் பகிர்ந்துகொள்ளும் தீபாவளி பண்டிகை ,சந்தோஷமும் , உல்லாசமும் கலந்த தீபாவளி பண்டிகை!விடியற்காலையில் எழுந்து  எண்ணெய் தேய்த்து குளித்து ,மகிழ்வுடனே    புத்தாடை  உடுத்தி,   இனிப்பினை பகிர்ந்து,பெரியவர்களிடம் வாழ்த்தும், நல்லாசியும் பெற்றுஊர் எங்கும்  ஒன்றாய் கலந்து கொண்டாடும்  தீபாவளி!நாட்டில் உள்ளவர்கள் பல விதமாய் கொண்டாடும் தீபாவளி வடக்கே விளக்கு பூஜை என் கொண்டாடும் தீபாவளி,இல்லறத்தில் இனிப்பு கொண்டு கொண்டாடும் தீபாவளி,புன்சிரிப்புடன், மன நிறைவாய்  , வாழ்த்து பெரும் தீபாவளி !வெடியும், சரமும், மத்தாப்பும் கையில் ஏந்துவோமே பட்டாசு  சப்தமும், சித்திர பூப்போல சிதறும் மத்தாப்பினை காண்போமே,மாலையில் கம்பி மத்தாப்பையும் நம் கையில் பிடிப்போமே,சங்கு சக்கரம், புஸ்வாணப்  பூக்களின் சிதறலை கண்டு களிப்போமே !அசுரன்  நினைவாக  நாம்   தீபாவளி பண்டிகை கொண்டாடுகிறோமே  பட்டாசு சத்தத்தால் புகையும், சுற்றுப்புறசூழலையும் கெடுக்கின்றோமே பார்வையற்றவர்கள் விடுதிக்கும், முதியோர் இல்லத்திற்கும்   செல்வோமே அவர்களுடன் இனிப்பினை பகிர்ந்து தித்திக்கும் தீபாவளி கொண்டாடுவோமே!நாம் பெற்ற  செல்வத்தை  நலமுடனே காப்போமே ஈதல்  இசைபட வாழ்தல் எனும் வள்ளுவனின் வாக்கினை ஏற்போமே ,அண்டை, அயலாருடன் நட்பும் நல்லுறவு  பேணுவோமே பண்டிகை நல்லதென்  வாய்ப்பு தந்ததென சொல்வோமே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.