தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

பட்டாசு  சத்தம்: கே. நடராஜன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

பட்டாசு சத்தத்தில் பறக்க மறந்தன பறவைகள் ...கண் 
திறக்காமல் பயந்து  அழுதன    சிறு குழந்தைகள் !
மறக்காமல்  இனிப்பு சுவைத்து வாழ்த்துக்கள் சொன்னது 
"பெரிய" மனிதர்கள் நாம் மட்டுமே !  !   ஆனால் ...வெடித்த 
பட்டாசு சத்தத்தில் நாமும் மறந்தது நமக்கு பட்டாசு கொடுக்கும் 
அந்த சிவகாசி சிறாரின்  அவல நிலையை !...வான வேடிக்கை 
வெளிச்சத்திலும் நாம் நினைத்துப் பார்க்க   மறந்தது ஒரு சிவகாசி தொழிலாளியின் 
இருண்ட   வாழ்க்கையை ...!  அது மட்டுமா ?
நீரின்றி வாடும் தன்  நிலம் பார்த்து சத்தம்  போட்டு 
அழும் அந்த  உழவனின்  மனக்குமுறலை  மறைத்ததும் 
இந்த பட்டாசு சத்தம்தான் !
சுத்தமான காற்று  சத்தமில்லாமல்  தொலைந்து 
மறைந்து போனதும் இந்த பட்டாசு  சத்தம் போட்டு 
விட்ட கரும் புகையினால்தானே !
தீப ஒளி மட்டும்  ஏற்றி  புத்தாடையுடன் பலகாரமும்  நலிந்தோர் 
வீட்டுக் குழந்தைகளுடன்   பகிர்ந்து மகிழும் பண்பை நம் பிள்ளைக்கு 
நாம் போதிக்க வேண்டும் ஒரு பால பாடமாக ! இந்த பாடம் 
ஒரு நல்ல வித்தாகும் பட்டாசு சத்தமும் புகையும் இல்லா தீபாவளி 
திருநாள் ஒருநாள் பூத்து மலர !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.