சுனாமியின் சுவடுகள்: அமுதகவி நா. முனுசாமி


சுனாமியின் சுவடுகள் பற்றி
சொல்லவும் இயலாதே..!
ஏற்பட்ட அழிவுகளை
எடுத்தியம்ப முடியாதே
சுழன்றடித்த காற்றினால்
சாய்ந்தன மரங்கள்
விரைந்து வந்த சுனாமியால்
விழுங்கப்பட்டதே மனித இனம்
வேகமான காற்று வந்து
சோகமதைத் தந்ததுவே
வீட்டின் கூரையெல்லாம்
வீணாகிப் போனதுவே
மின்கம்பம் சாய்ந்ததனால்
மின் இணைப்பு போனதே
தண்ணீர் இல்லா நிலையினல்
தவிக்கின்ற காலமானதே
போக்குவரத்துப் பாதிப்பால்
பொருள்வரத்துக் குறைந்ததே
அவசரத்திற்கு சென்றுவரா
அவலநிலை வந்ததே..
அன்றாட உணவிற்கு
அவதிப்படும் நிலையாச்சே
வீடிழந்து வீதியில் வரலாச்சே
இதுபோன்ற சுனாமி
இனியும் வரலாமோ
அப்பாவி மக்களுக்கு
அவதியினை தரலாமோ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...