தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சுனாமியின் சுவடுகள்: -வாலிதாசன்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

கோரம் நிகழ்வதெல்லாம்மனிதர் செய்யும் சோரம்கொடுமை மனிதர் செய்யும் வேலைகொடுமை இல்லை இயற்கை செய்யும் வேலைஇயற்கையைப் பழித்து கவிபாடும் கவிஞர்களுக்கு கண்டனத்தை கடுமையாய் கூறுகிறேன்உங்களைப்பழிப்பதால் இயற்கப்பிதாவின் பேரருளைப்பெறுகிறேன்ஆறுகளெல்லாம் அழித்து ஆலைகட்டியது நாம்காடெல்லாம் அழித்துகட்டடங்கள் கட்டியது நாம்நிலத்தையெல்லாம் வெட்டிஎடுத்தது நாம்நதியின் மணலெல்லாம் அள்ளிகதியற்றதாக்கியது நாம்வழியோடும்  பாதையெங்கும்நடுகல்லை நட்டது நாம்கடல் பொங்கியழிக்கிறதெனபழிபோடுவதென்னவோ இயற்கை மீதுசும்மா இருந்தவன் சுருக்கு பையை என்றாவது பறித்ததா காற்று?பிரச்சினை இல்லாது படுத்துறங்கியவனை என்றாவது விழுங்கியதா நிலம்?சீரோடிருந்தவரை சீரோடு இருந்த வரைஎன்றாவது நீரோடு என்றாவது அள்ளியதா கடல்?எந்த மனிதனின் பணத்தைப்பிடித்து வைத்து ஏடி எம் வாசலில் என்றாவது நிற்கவைத்ததா சூரியன்?உலகை அழிக்கக் கிளம்பியகொடிய சாத்தானின் பிறப்பைபொங்கியெழுந்து மிரட்டித்தெரியப்படுற்றியதுஆழிப்பேரலை.ஏசுவுடன் சேர்த்து சிவனும் அல்லாவும் சாத்தானால் சிறைப்பிடிக்கப்பட்டு சிலுவையில் அறைந்தனரோ அன்று.கனவுகள் பலவுடன்சுற்றிக்கொண்டிருந்த பீட்டரும் முத்துவும்மீன் அரித்த பிணங்களாய்கண்ணிழந் கரை ஒதுங்கினரே.ஆயுளின் பாதியை அர்ப்பணித்துவியர்வைக் கவி எழுதிய பணத்தில்வாங்கப்பட்ட அப்துல்லாவின் புத்தம்புது படகு சிதறிய சுல்லியாய் அடுப்பில் எரிந்ததே.ஐயோ எத்தனைசுவடுகளை காண்பேன்வலுவிழந்த இந்தக்கண்களால்?இயற்கை தேவகுமாரனின் செல்லப்பிள்ளைபூமியின் பூபாளக்காட்டில்புகுந்த புல்லுருவிகள் மனிதர்கள்.மானுட சிநேகத்திற்கு மலர்ந்தவைதான் குமுகம் வாழ இயேசுகுமரன் படைத்தான்காடும் மேடும்  எங்கள்வனாந்தரத்தின் கனவுகள்.ஏகாதியப்பத்தியத்தின் எருக்கம் பாலாய் கரத்தை நீட்டியதுதன்கோரம் முகத்தைக் காட்டியது வான அரசியின் மேனியை குழைத்தது வான மகன் பிறந்த நாளோகடலுங் கொதித்ததுஆயிரங்கொடுமைகள் துள்ளிக்குதித்ததுநடந்த பிந்தானே நமக்கெல்லாம் ஞானம் கிடைத்ததுபாத்தி கட்டி பேத்தி கட்டி வளர்த்த காலமெங்கேஏத்தங் கட்டி இறச்சு நெல் வளர்த்த காலமெங்கேகாற்றடிச்சு பறந்த வெறும் பஞ்சாகிப் போயிடுச்சேமக்காத நெகிழிகளும் சிக்காத நச்சு வாயுகளும்வெறிச்சோடிப்போன வார்தா புயலாட்டமாகிப் போயிடுச்சே.புன்னைமரப் பூரிப்பும்கொன்றை மலர் வாரிப்பும்விட்டோடிப்போய் நெடுங்காலம் ஆயிடுச்சேசாலையெல்லாம் மரமாகிவீடெல்லாம் மலர்ச்சோலையாகிஇருந்ததெல்லாம் வெட்டியெறியப்பட்டதுவெப்பம் கொட்டி சுனாமியால் அறியப்பட்டதுசூடாகும் மண்மாதாஉன் மழலை செய்யும் பிழையைநீ மன்னிக்க மாட்டீரோசுனாமியின் சுவடுகள் மறக்கநீயொரு மழைச் சுப்ரபாதம் பாடு புன்னகைமலர்த்தும் இந்த நாடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.