தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சுனாமி சுவடுகள்: பாவலர் கருமலைத்தமிழாழன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

கடற்கோள்கள்   வந்ததென்று   சங்க   நூல்கள்            கழறுவதை    நேற்றுவரைப்   பார்க்க   வில்லைஇடங்களாக  மிளிர்ந்தஊர்கள்   கடலுக்  குள்ளே            இருந்தயிடம்   தெரியாமல்   மறைந்த   தென்றார்நடமாட   தமிழ்வளர்த்த   சங்கம்   மூன்றும்            நறுநூல்கள்   எல்லாமும்   போன   தென்றார்படமாகக்   காட்டிட்ட    பாடற்   காட்சி            பார்ப்பதற்குக்   கண்முன்னே    வந்த  தின்று !ஆழிப்பே   ரலைதன்னைச்   சுனாமி   யென்றே            அழைத்தார்கள்   சென்னையினைத்   தாக்கும்   போதுஊழிப்பேர்    கூத்தாக    வேளாங்   கண்ணி            உயரெழுந்தே    நாகையினை   கடலூர்   தன்னைவாழிடமாய்   இருந்தகடற்   கரையின்   ஊரை            வாய்க்கரிசி   போட்டதுபோல்    எடுத்துக்   கொண்டுபாழிடமாய்  செய்ததுவே   முதியோ   ரோடு            பசுங்குழவி  உயிர்களையும்  விழுங்கி   விட்டு !பருவமழை   எனமுன்பு   பெய்த   போது            படர்ந்தஏரி   குளங்களினை   நிரப்பி  விட்டுஅரும்விளைச்சல்   தந்ததெல்லாம்    மாறிப்   போக            ஆர்க்கின்ற   காற்றோடு   மழையும்   சேர்ந்துபெரும்புயலாய்   கடல்கடந்து   நகரைச்   சூழ்ந்து            பேரழிவைத்   தந்ததந்த   சுனாமி   போன்றே !வரும்நாளில்   இச்சுவடு    பதியா   வாறு            வளரறிவால்   திட்டங்கள்   வகுப்போம்  நன்றாய் !ஓலங்கள்   ஒப்பாரி !  வீடு   வாசல்            ஒன்றிருந்த   உறவெல்லாம்   அழிந்து   போககாலங்கள்   துயர்சுவட்டை   மாற்று  மென்று            கடமையினைச்   செயும்போது   மீண்டும்  மீண்டும்கோலத்தை   மாற்றுதற்கே   புயல்கள்   வீசி            கொடுமைகளை  விதைக்கிறது   சுனாமி   போன்றேஏலமாக   வாழ்க்கையிங்கே    போகு  முன்பே            ஏற்றதொரு   திட்டத்தை    வகுப்போம்   நன்றாய் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.