2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

வேலி தாண்டிய காற்று: பொன்.இராம்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

மழலையின் சிரிப்புக்கு ஏது வேலி!
பொங்கிய அலைகடலுக்கு ஏது வேலி!
பூக்கின்ற மரங்களுக்கு ஏது வேலி!
இயற்கை காற்றிற்கு ஏது வேலி!
தாயன்பிற்கு ஏது வேலி!
வேலி தாண்டிய காற்று
வரப்போகும் இயற்கை அழிவின்
முன்னோடி!

நல்முத்து நிறைந்த மக்கள் பரவையிலே
சாயங்கள் கலந்த பாசிஇலஞ்சங்களை
வேலி தாண்டிய சட்டக் காற்று
அழிக்கும் காலம் எப்போது?
சாதி மதமின்றி வாழும்
சமுதாயம் உருவாக
வேலி தாண்டிச் சென்ற காற்று
உதவாதோ!

ஏழை பணக்காரன் பேதமின்றி
சரிநிகர் சட்டங்கள் படைக்க
வேலி தாண்டிய காற்று
உதவாதோ!
சுதந்திரப்போராட்டச் செந்நீர்
பட்ட இன்பத்தில்
மகிழ்ந்திருந்த மண்மாதா
அரசியல்வாதிகள் நடத்திய
போர்க்கள யுத்தத்தினைப்
பார்க்க மனமின்றி வாயு புதல்வனை
அனுப்பினாளோ!

படித்தவர் விலகியிருக்க
பாமரர் வயிற்றிற்காக
விலை போக
பதவி காக்க
சட்டத்தை வளைத்த
ஈனர்களை அழிக்க வேலி தாண்டிய காற்று!

மார்கழி மாதத்து மழைத்தண்ணீர்
மாசற்ற மக்கள் வித்தை விதைக்க
வேலி தாண்டிய காற்றுடன்
ஒய்யார பாலே நடனம்!

இனி ஒரு சுயநலமில்லா உலகம் படைக்க
யார் வருவார் என்ற ஆவலில்
வேலி தாண்டிய காற்று!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.