வேலி தாண்டிய காற்று : கவிஞர் " இளவல் " ஹரிஹரன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

வேலிதாண்டும் காற்றுக்கு வெட்கம் இல்லை வேதனையால் வாடுமக்கள் துக்கங் கொள்ளநீலியாட்டம் போடுகின்ற பெண்ணைப் போல நிழல்தரு ம ரத்தையெலாம் சூறை யாடிக்காலிசெய்யுங் கள்வனாகிச் சாய்த்த தென்ன! கண்ணின்முன் வேரோடு மாய்த்த தென்ன!போலியான இயற்கைநேசம் கொள்ளும் மாந்தர் புரிந்துகொள்ளக் கற்பித்த பாட மன்றோ!வேலிதாண்டும் வெள்ளாடோ பலியாய்ப் போகும் விழைந்துமன ஆசையினால் வேகங் கொண்டுவேலிதாண்டும பெண்ணுக்கோ மதிப்பு மில்லை விரிந்தகரம் போலநீட்டி வெளியே எட்டும்வேலிதாண்டும் மரக்கிளையோ வெட்டுப் பட்டு விதவிதமாய்த் துண்டாகிப் போகு மன்றோ!வேலிதாண்டும் எல்லாமே ஒருவ கையில் வேதனையை உண்டாக்கிப் போகு தன்றோ?வேலிதாண்டும் போதுதான் சண்டை யாகும் வீடெனினும் நாடெனினும் விளைவ தொன்றே!வேலியெனுங கோடுதாண்டிச் சீதை போக விளைந்தகதை இராமகாதை யான தன்றோ!மேலெழுந்த வாரியாகப் பார்ப்ப தற்கு மேதினியில் பாடம்போ திப்ப தற்குவேலிதாண்டி யகாற்றும் மக்க ளுக்கு வார்தாவாய்ப் புயலாகிச் சொன்ன தனறோ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...