எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வானமழை நீ யெனக்கு: தாமோதரன் கபாலி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

வானமழை நீயெ னக்கு! வனமழகே நீயெ னக்கு!
கனமழை நீயெ னக்கு! கவியழகே நீயெ னக்கு!
தானமழை நீயெ னக்கு! தனமழகே நீயெ னக்கு!
ஞானமழை நீயெ னக்கு! நாநவிலும் நீயெ னக்கே!
 
வானமழை வளமே வாழி! வழங்கிட்ட வாழ்வே வாழி!
கானமழை இசையே வாழி! களிப்பூட்டும் கவியே வாழி!
ஞானமழை அருளே வாழி! ஞாலத்தின் புகழே வாழி!
மோனநிலை மகிழ்வே வாழி! முகிழ்ந்திட்ட அறிவே வாழி!
 
அருளாகும் வான்ம ழையே அறிவாக ஒளிர்வாய் நீயே!
மருளாகும் மயக்கத் தையே வழக்கொழியக் காப்பாய் நீயே!
உருவாகும் உயிர்மை நீயே!உலகாளச் செய்வாய் நீயே!
திருவாகும் தெய்வம் நீயே! திருவடிக்குத் துணையும் நீயே!
 
வருமழையாய் வழங்கும் வானம் மண்ணோடு புணர்ந்துக் கூடும்!
பெருமழையால் துயரம் ஆயின் பெருக்கிவைக்க மகிழ்ச்சிப் பின்னே!
திருமழையால் குளிரும் உள்ளம் திருவடியைத் துணையாய்க் கொள்ளும்!
அருள்மழையால் நனைந்து நாளும் அறிவொளியைச் சேரும் பாரே!
 
நற்றவர் மழையே வேண்டும்! நானிலம் சிறக்க வேண்டும்!
கற்றவர் களிக்க வேண்டும்! கற்பகம் அருள வேண்டும்!
பெற்றவர் பெருக வேண்டும்! பெண்மையை மதிக்க வேண்டும்!
உற்றவர் உணர வேண்டும் உன்னதம் செழிக்க வேண்டும்!
 
சீர்மிகும் மழையின் செல்வம்! செந்தமிழ் அழகின் தோற்றம்!
ஊர்மிகும் மழையின் ஆற்றல்! உணர்வுறும் உயிரின் ஆக்கம்!
ஏர்மிக மழையைப் போற்று! இன்புற இசையை யேற்று!
நேர்வுற மழையை நாடு! நித்திய தெய்வம் காணே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.