எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வான மழைநீ யெனக்கு: சாலை கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

வான மழைநீ யெனக்குன்றன்
        வாய்ச்சொல் சிதறி வந்தமிழ்து
தான மாக தந்தென்னைத்
         தழைக்க வைத்த தண்டமிழே!
ஞான வழியில் இருந்தயென்றன்
          நாதன் வாய்மை மெய்யமுது
கான மழையாய்ப் பொழிந்தென்யுள்
           காவல் நிற்கும் சொல்லமுதே!
சின்ன சின்ன துளியாச்சு!
         சிந்தி வழியும் பொருளாச்சு!
கன்னல் கரும்பின் சுவையாச்சு!
         காற்றைக் கிழித்து வெளியாச்சு!
முன்னம் இருந்து வரலாச்சு!
          முத்தி நல்கும் வழியாச்சி!
இன்ப வெள்ள உணர்வாச்சு!
           என்றும் மகிழும் வாழ்வாச்சே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.