எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வான மழை நீ யெனக்கு: கா. மகேந்திரபிரபு

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

வானத்தின் தண்ணீர் வெளிச்சம் 
வான் மழை எனும் செல்வம்
உயிருக்கு ஆதாரம் மழை நீர் 
உலகின் எதிர்கால செல்வமாய்
மழைக்கால மண் வாசனை 
மனதை மயக்கும் மாய இன்பம்
குடை வேண்டாம் என்றே 
குதூகலம் காண்கிறது இளையஉலகம்
மழை மண்ணின்  தாய்ப்பால் 
மனிதனின் உயிர்ப்பால்
காலத்திலே கிடைக்கும் 
கண்களுக்கு அரிய பரிசு
மாசுபட்டால் அமிலமாய் 
மண்ணில் விழும் மழையே 
நன் மழையாய் விழுவாயா ?
நான் விரும்பும் நேரத்திலே 
என் அருகே நீ இருந்தால் 
செழிப்பேன் வான் மழையே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.