எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வான மழை நீ யெனக்கு: அதி. இராஜ்திலக் 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

ஆகாய  காவிரியாய்,
அணையில்லா பாலாறாய்,
வான் மழையே நீயெனக்கு,
வந்ததினால் வாழ்விருக்கு!
வாடாத நெல்லிருக்க, 
வயல்கொண்டு நாமிருக்க,
மூடாத பெரியாற்றில், 
முடங்காது நீயிருப்பாய்
நீயின்றி நிலமுண்டோ !
நிலமின்றி உயிருண்டோ!
உயிரின்றி உலகுண்டோ !
உலகினிலே மகிழ்வுண்டோ !
மகிழ்வென்றும் தொடர்ந்துவிட 
மாதம்  மூன்றாய் வந்துவிட 
மாரியென்று தொழுதிருப்போம் 
மண்ணிலுள்ள உயிர்களோடு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.