நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

எல்லைக்கோடு : கா. மகேந்திரபிரபு

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

நாட்டின் எல்லை முற்றம் 
நம் மண்ணின் பரப்புக்குள்ளே !
தேசக்கதவுகள் நிலைகொள்ள 
தேசத்தின் எல்லைக்குள் பாதுகாப்பு !
எல்லைக்கொடி பறக்கும் 
எங்கள் வீரர்களின் வீரத்திலே
எதிலும் வெற்றி காணும் பாரதம் 
எல்லைக்கோடு என்ன ஒரு சவாலா ?
அண்டை நாடுகளின் ராணுவம் 
அந்நியர்களின் ஊடுருவல்கள் 
மண்ணாசையை வெல்வோம் 
மண்ணின் மைந்தர்களே வாரீர் !
வீரமுழக்கம் - சுபாஷ் சந்திரபோஸின் வீரம் 
வீரர்களே வாரீர் ! எல்லைச்சாமிகள் நீங்கள் !
அந்நியர்களின் படையெடுப்பை தடுப்போம் 
ஆங்கிலேயத்தைப் போல வெல்வோம்
சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் வேளையில்
சுதேசிகளே வாரீர் ! நம்ப டைகள் சேர்ப்போம் !
பகைவர்களுக்கு பயம் தருவோம் 
பதிலடி தருவோம் எல்லையைத்  தாண்டினால் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.