நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

எல்லைக் கோடு: சாலை நந்தகோபால் கிருஷ்ணமூர்த்தி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

எல்லைக் கோட்டைக் காகின்றோம்!
      என்றும் காப்போம் இமைக்காது!
தில்லைப் பெருமான் பேர்சொல்லி
     திக்கை நாங்கள் காக்கின்றோம்!
சொல்லில் ஆணை பிறந்துதுமே
     துணிந்து நாங்கள் போரிடுவோம்!
ஒல்லை ஏதும் நேராமல்
     உவந்து கோட்டைக் காப்போமே!
சொல்லை ஏற்றுப் பணிசெய்வோம்!
     சுகத்தை தியாகம் செய்கின்றோம்!
கல்லும் முள்ளும் மலைமற்றும்
    கார்கில் பனியும் பொருட்படுத்தோம்!
வில்லும் நாணும் தேவையில்லை!
    விருப்பால் சேவை செய்திடுவோம்! 
அல்லல் அடையோம்! அகமகிழ்ந்தே
     அன்னை நாட்டைக் காத்திடுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.