தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்ஃபார்ம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

24.02.1948: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினம் இன்று!

தமிழக முதலமைச்சரும், முன்னாள் நடிகையுமான ஜெயலலிதா, 1948-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் கர்நாடக மாநிலம் மேல்கோட்டை என்னும் கிராமத்தில் பிறந்தார்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

DIN

தமிழக முதலமைச்சரும், முன்னாள் நடிகையுமான ஜெயலலிதா, 1948-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் கர்நாடக மாநிலம் மேல்கோட்டை என்னும் கிராமத்தில் பிறந்தார். இவருடைய தாய் சந்தியாவும் திரைப்பட நடிகையாக இருந்ததால் சென்னையில் வசித்து வந்த ஜெயலலிதாவிற்கு பள்ளிப்படிப்பின் இறுதியிலேயே திரைப்பட வாய்ப்புகள் குவிந்தன.

ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தமிழ் திரைப்பட நடிகர்களில் முக்கியமானவர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்தார். ஒரு கட்டத்தில் அதிமுகவில் இணைந்து அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராகவும் பதவி வகித்தார்.

எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த போது, நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சூராவளி பிரச்சாரம் செய்து அதிமுக ஆட்சி உருவாக பாடுபட்டார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக பணியாற்றி நாடாளுமன்ற விவாதங்களில் முத்திரை பதித்தார்.

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து 1989-ஆம் அண்டி அதிமுகவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச் செயலாளர் ஆனார். 1989-ம் ஆண்டு முதல் 1991 வரை தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றினார். 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று தமிழகத்தின் 11-வது முதலமைச்சராக முதல்முறையாக பதவியேற்றுக் கொண்டார்ர்.

அதைத் தொடர்ந்து இன்றுவரை தமிழகத்தின் முதல்வராக 4 முறை பதவி வகித்துள்ளார். இவர் கலைப் படைப்புகளுக்காகவும், சமூகப் பணிகளுக்காகவும் கலைமாமணி விருது, தங்க மங்கை விருது என பல விருதுகளை பெற்றிருக்கிறார். இதுமட்டுமின்றி புரட்சித் தலைவர் என்றழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக கருதப்படுவதால் இவரை புரட்சித் தலைவி என்று மக்கள் கூறி அழைக்கின்றனர்.

உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு 2016 செப்டம்பர் 27-ஆம் தேதியன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்கள் நடந்த சிகிச்சையின் முடிவில் 2016, டிசம்பர் 6-ஆம் தேதி மரணமடைந்தார்  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.