கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

08.10.1932: இந்திய விமானப் படை தினம்!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி இந்திய விமானப் படை தினமாக கொண்டாடப்படுகிறது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

DIN

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி இந்திய விமானப் படை தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்தியப் பாதுகாப்புப் படை அணியின் ஒரு முக்கிய அங்கமாக இந்திய விமானப் படை உள்ளது. இந்த படையானது 1932-இல் அக்டோபர் மாதம் 8ஆம் தேதியன்று, இந்தியா ஆங்கிலேய ஆட்சியில் இருந்த சமயத்தில்  உருவாக்கப்பட்டது.

இந்திய விமானப்படைச் சட்டம் 1932- ன்படி இங்கிலாந்து ராயல் விமானப் படையின் ஒரு பகுதியாகவே  இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இங்கிலாந்து படைகளின் சீருடை மற்றும் முத்திரைகளையே இந்திய விமான படையினரும் பயன்படுத்திவந்தனர்.

இரண்டாம் உலகபோரின்போது ஜப்பான் மற்றும் பர்மா கூட்டுப் படைகளை தடுத்து நிறுத்தியதில் இந்திய விமானப் படை முக்கிய பங்கு வகித்தது. நாடு விடுதலை அடைந்த பின்பு நமது பாதுகாப்பு படையின் ஓர் இன்றியமையாத அங்கமாக விமானப்படை உருவானது. தற்சமயம் உலகின் நான்காவது பெரிய விமானப்படையாக நமது விமானப்படை திகழ்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.