திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கிடைக்கிற பணத்தில் முதலில் குழந்தைக்கு பால் வாங்கித் தருவதா? நான் சாப்பிடுவதா?

பொன் விழா கலைஞர்கள்: சவுகார் ஜானகி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவியோகி வேதம்

இன்று அரசாங்கமே புகழ்ந்து பாராட்டும் அளவில் என் நிலை இருக்கிறது. எங்கு சென்றாலும் எனக்கு விசிறிகள். ஆனால் ஆரம்பத்தில் என்னதான் உயாந்த குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும், சினிமாவில் நடிக்கிறேன் என்ற என் தொழில் காரணமாக சமூகம் எனக்கு குடியிருக்க வீடு கூட கொடுக்காமல் இருந்த காலமும் உண்டு.

'தங்க இடம் இல்லை, ஒரு இரவு  மட்டுமாவது தங்க அனுமதி குடு' என்று நெருங்கிய உறவினரை நான் அணுகிய பொழுது, 'விடிவதற்கு முன் எழுந்து சென்று விடு; நீ சினிமாவில் நடிக்கிறாய்; என கணவருக்கு பிடிக்காது' என்று சொன்னார்கள். அவ்வையார் சொன்னாரே, கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது' என்று அதனை நான் உணர்ந்தேன். என் வாழ்க்கைக்காக போராட முன் வந்தேன்.

என்னுடைய சொந்த வாழக்கையில் பிரச்சசினைகள் பல இருந்தாலும் , இந்தக் கலையை மனப்பூர்வமாக நான் விரும்பியதால் அதில் ஒன்றிப் போனது உண்மை. சில சமயங்களில் சந்தர்ப்பங்களின் அழுத்தம் என்னை பாதித்திருக்கிறது.

ஜெமினி அதிபர் திரு.வாசன் அவர்கள் 'மூன்று பிள்ளைகள்' என்ற படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். அதன் தெலுங்கு பதிப்பில் நான் நடித்தேன்.    ஷூட்டிங்குக்காக வந்திருந்தேன். லைட் எல்லாம் போட்டாகி விட்டது. துவஙகும் நேரத்தில் மயக்கம் போட்டு நான் செட்டிலேயே விழுந்து விட்டேன். வாசன் அவர்கள் உடனடியாக என்னை ரங்கா நர்சிங் ஹோமில் சேர்த்து ஒரு வாரம் வைத்தியம்  பார்த்தார். உடல் சீரானது நான் ஸ்டூடியோவுக்கு போனேன். பாஸ் கூப்பிடுகிறார் என்றதும் நான் அதிர்ந்து போனேன். நான் அவர் அறைக்கு போனதும், 'என்னது இது நீ சரியாகவே சாப்பிடுவதில்லை போலவே? டாக்டர் சொன்னார். அதான் உடல் கோளாறுக்கு  காரணம் என்கிறாரே? நன்றாக சாப்பிடக் கூடாதாம்மா? என்றார்.

என் கண்களில் நீர் பொங்கியது. 'சார், எனக்கு குழந்தை பிறந்து 20 நாட்கள்தான் ஆகிறது. நான் ஷூட்டிங்கிற்கு வந்து விட்டேன். சாப்பிடதாதற்கு காரணம், சாப்பிட இல்லாததுதான் சார். கிடைக்கிற பணத்தில் முதலில் குழந்தைக்கு பால் வாங்கித் தருவதா? நான் சாப்பிடுவதா? என்றேன்.

அவருக்கு இளகிய மனம்.நான் அக்கவுண்ட்டிடம்  சொல்கிறேன். உனக்கு இந்தப் படத்திற்கான பூரா  பணத்தையும் வாங்கிக் கொள்.முதலில் சாப்பிட  சாமான்களை வாங்கிப் போடு வீட்டில் என்று கூறியவர் அப்படியே அதே நிமிடத்தில் பணத்தையும் கொடுத்தார். இன்னும் நன்றியுடன் அவரை நினைவு கூர்கிறேன். அவர் கைராசி என் வாழ்க்கை அன்று முதல் வளமாகவே உள்ளது.

பேட்டி: குயிலி ராஜேஸ்வரி

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.06.82  இதழ்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.