எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தமிழ் சினிமா உலகம் இன்னும் எத்தனை பேர் வந்தாலும் தாங்கும்!

எம்.ஜி.ஆர் -சிவாஜி; ரஜினி-கமல்; இது பின்னால் எப்படி தொடரும்னு ஒருத்தர் ரீசன்ட்டா எங்கிட்ட கேட்டார்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவியோகி வேதம்

எம்.ஜி.ஆர் -சிவாஜி; ரஜினி-கமல்; இது பின்னால் எப்படி தொடரும்னு ஒருத்தர் ரீசன்ட்டா எங்கிட்ட கேட்டார்.

எம்.ஜி.ஆர் -சிவாஜிக்குப் பிறகு யார் வருவாங்கன்னு அப்ப யாராவது கணிக்க முடிஞ்சதா? மோர் ஓவர் இப்படிக்  கேக்குறதிலயே ஆதாரமா ஒரு அடிப்படைத் தப்பு இருக்குன்னு எனக்கு தோணுது. இவங்க இன்னும் உச்சியிலதான இருக்காங்க. அப்புறம் இவங்களுக்குப் பிறகுங்கற கேள்வி எப்படி வர முடியும்? எம்.ஜி.ஆர் மேல நம்ம ஜனங்களுக்கு எப்பபடிப்பட்ட 'அடோரேஷன்'    இருந்தது; இருக்கிறது. அவர் படங்கள்ல ஏத்து நடிச்ச பாத்திரங்களினால்  மட்டும் ஏற்பட்டதில்லை அது. அவரைப் பார்த்தாலே போதும்கிற மனோபாவம் அது;அவர் முதலமைச்சரை இருந்தாலும் அடிப்படையில் ஒரு கலைஞர்.

சிவாஜியை எடுத்துக்கிட்டா அவர் இன்னும் வலுவா நடிச்சுக்கிட்டு இருக்கார். யார் வந்தாலும் எத்தனை பேர் வந்தாலும் அவர் படங்கள் ரொம்ப நல்லா ஓடுது. பிரமாதமா பிசினஸ் ஆகுது. அப்படியிருக்கும் போது இவங்களுக்கு அப்புறம்ன்னு நினைக்கிறதே அபத்தமா இருக்கு.

சரி..ஒரு வாதத்துக்கு வெச்சுகிட்டு கூட..எம்.ஜி.ஆர்-சிவாஜிக்கு அப்புறம் கமல்-ரஜினி வந்தா மாதிரி ..எங்களுக்கு அப்புறம் நிச்சசயமா வருவாங்க. இது தொடர்ற விஷயம்.    அதுக்கப்புறம் யாருமே இல்லைனு முடிஞ்சு போயிடறதில்லை. எத்தனை யங் ஸ்டார்ஸ் இன்னைக்கு வந்திருக்காங்க.  தமிழ் சினிமா உலகம் இன்னும் எத்தனை பேர் வந்தாலும் தாங்கும். காலமும் நேரமும் சரியான நேரத்துல பளிச்சுன்னு ஒருத்தரை  கை  காட்டும். நிச்சயமா இது தொடரும்.

பிரசன்னா

(சினிமா எக்ஸ்பிரஸ்  15.02.82 இதழ்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.