/

சினி மினி

வடிவுக்கரசியை ஒரு போட்டோகிராபர் சந்தித்த பொழுது ஒரு டல் கலர் புடவையைக் கட்டிக் கொண்டிருந்தார்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:12 pm

உமா ஷக்தி.

வடிவுக்கரசியை ஒரு போட்டோகிராபர் சந்தித்த பொழுது ஒரு டல் கலர் புடவையைக் கட்டிக் கொண்டிருந்தார். பிறகு இரண்டு மாதங்கள் கழித்து வடிவுக்கரசியை அந்த போட்டோகிராபர் சந்தித்த பொழுதும் அதே டல் கலர் புடவையை அவர் உடுத்தியிருந்தார். ஆச்சரியத்தோடு அந்த டல்லைப் பற்றி விசாரித்ததற்கு வடிவுக்கரசி சொன்னதாவது : ‘நான் வெரி புவர் கேர்ள் சார்!’

**

சங்கரபரணம் படத்தில் ராகம் தானம் பல்லவி என்று ஒரு பாடல் வருகிறதல்லவா? அந்தப் பாடலுக்கு ரவீந்தர் பரத நாட்டியம் ஆடுகிறாராம். ‘ஆசைகள்’ என்ற படத்தில்.

**

நீண்டகால இடைவெளிக்குப் பிறகு எம் ஜி ஆர் ஒரு முறை மேக்கப் ரூமிற்குள் நுழைந்தார். தம்முடைய பிரத்யேகமான அந்த மேக்கப் ரூமைச் சுற்றி முற்றிப் பார்த்தார். இது ‘பொற்காலம்’ துவக்கவிழா சத்யா ஸ்டுடியோவில் நடைபெற்ற பொழுது நடந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.