/

சினிமா மொழிகள்

முதல் பட அனுபவம் முதல் இரவு அனுபவம் போன்றது. நினைத்து ரசிக்கலாமே தவிர வெளியே சொல்லக் கூடாது

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:12 pm

உமா ஷக்தி.

  1. முதல் பட அனுபவம் முதல் இரவு அனுபவம் போன்றது. நினைத்து ரசிக்கலாமே தவிர வெளியே சொல்லக் கூடாது
  2. நடிகன் சிரித்தால் நான்கு நடிகைகள் குளோஸ். நான்கு நடிகைகள் சிரித்தால் நாற்பது பட முதலாளிகள் கிலோஸ்!
  3. சினிமாவில் கலைஞரக்ள் சம்பாதிப்பது, நந்தவனத்தில் பூக்கள் வாடுவதற்குள் அவசர அவசரமாகப் பறிப்பதைப் போன்றது.
  4. சினிமா ஸ்டுடியோவில் காப்பி கொடுக்கும் பையன் கூடப் படப்பிடிப்பு நேரத்தில் பட முதலாளிகளை ‘சைலன்ஸ்’ என்று அடக்கி விட முடியும்.
  5. உண்மையான கலைஞன் ஆர்மோனியப் பெட்டிக்குள் அடைபட்டிருக்கும் காற்றாக இருக்க  வேண்டும். அமுக்க அமுக்க இசையாகி, தன்னை அமுக்கியவனுக்கு ஆனந்தம் தரவேண்டும்.
  6. சினிமாக் கலை என்பது மிக்சர் பொட்டலம் போன்றது. அதில் அந்தக் கருவேப்பிலைதான் எழுத்தாளர்கள். தின்னும் போது அதைத் தூரத் தள்ளி விடுவார்கள்.

கூறியவர் – நாகேஷ் திரட்டியவர் – கே.சுப்ரமணியம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.