கவிஞர் பெற்ற காணிக்கை
செட்டிநாட்டு அரசர் ராஜா சர் முத்தையா அவர்களுடைய நூற்றாண்டு நினைவு விழாவில் கவிஞர் கண்ணதாசன்


செட்டிநாட்டு அரசர் ராஜா சர் முத்தையா அவர்களுடைய நூற்றாண்டு நினைவு விழாவில் கவிஞர் கண்ணதாசன் பதினாயிரம் ரூபாய் காணிக்கை பெற்றிருக்கிறார்.
தகுந்த ஒருவருக்குத் தகுந்த அறநிலையத்திலிருந்து பரிசு வழங்கப் பெற்றிருக்கிறது.
விழாவில் மாண்பு மிகு நெடுஞ்செழியன் பேசுகையில் கண்ணதாசன் சினிமாவுக்கு மட்டும் பாடல்கள் எழுதிக் கொண்டிராமல் கவிதைகளும் எழுதவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சினிமாப் பாடல்கள் என்று தரக்குறைவாக எண்ணுவதற்கு இடமின்றி கவிஞர் கண்ணதாசன் எழுதி வரும் பாடல்கள் கவிதைகளாகத்தான் இருந்து வருகின்றன.
சென்ற பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக கவிஞர் படங்களுக்கு எழுதி இருக்கும் பாடல்கள் கவிதை நயத்துடனும் ஆழ்பொருள் செறிவுடனும் வேறு யாரும் அப்படி எழுத இயலாது என்று சொல்ல வைத்திருக்கின்றன.
அரசியலில் இருந்து இப்போது விலகியிருக்கும் கவிஞர் கண்ணதாசன் மேலும் தரமான கவிதைகளும் எழுதி, இலக்கிய உலகிலும் தனக்குத் தனி இடத்தை நிலை நிறுத்திக் கொள்வார் என்று எதிர்ப்பார்க்கிறோம்.
அப்படிப்பட்ட ஒரு நிலை உருவாகத்தான் போகிறது. நாவலர் அதைக் கண்டு பூரிப்பு அடையத்தான் போகிறார் என்பதை இப்போதே சொல்லி வைக்கிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...