/

சினி மினி

கர்னாடகாவில் பிறந்து இந்திப் படங்களிலும் பிஸியாக நடித்து வரும் எழுத்தாளரும் டைரக்டருமான கிரிஷ் கர்னாட்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:12 pm

உமா ஷக்தி.

கர்னாடகாவில் பிறந்து இந்திப் படங்களிலும் பிஸியாக நடித்து வரும் எழுத்தாளரும் டைரக்டருமான கிரிஷ் கர்னாட், நியூயார்க் பல்கலைக் கழக மருத்துவப் பகுதியில் பணி புரிந்து வரும் டாக்டர் சரஸ்வதி கணபதியை மணந்து கொண்டார்.

**

மறைந்த நடிகர் எஸ்.வி.சுப்பையா, ‘காவல் தெய்வம்’ என்ற படத்தைத் தயாரித்தபோது சிவாஜி கணேசன் அப்படத்தில் நடித்ததற்காக ஒரு பைசாகூட வாங்க மறுத்துவிட்டார்.

**

1965-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போருக்குப் பிறகு முதன் முறையாக பாகிஸ்தானில் ஷேக் முக்தா ரின் ‘நூர்ஜஹான்’ ஜெனரலின் ஜியாவின் விசேஷ உத்தரவின் கீழ் திரையிடப் பட்டுப் பெரும் வெற்றி கண்டது.

இந்த வெற்றி காரணமாக பிரபல இந்தியப் படத் தயாரிப்பாளர் மெஹபூப்கான் டைரக்ட் செய்து தயாரித்த ஆன், அந்தாஜ், ஹூமாயூன், நஸ்மா, அவாஸ், அனேஹ்கி, அடா, அன்மொல்கடி முதலான ஏழு படங்களை மறுபடியும் திரையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதி சமீபத்தில் பாகிஸ்தானில் குடியேறிய சர்தார் அக்தரிடம் (மெஹபூனின் விதவை மனைவி) வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.