இந்திப் படத்தில் நடிக்க ஆசை! நடிகை மாதவி
கவர்ச்சியும் சாந்தமும் கலந்த அவருடைய கண்கள் கருவண்டாகச் சுற்றுவதை இன்றெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாலும்


கவர்ச்சியும் சாந்தமும் கலந்த அவருடைய கண்கள் கருவண்டாகச் சுற்றுவதை இன்றெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாலும் கூடச் சலிப்புத் தோன்றாது. அழகென்றால் அழகு, கொள்ளை அழகு!
உங்கள் மேனியை இவ்வளவு கவர்ச்சியாகவும் கச்சிதமாகவும் வைத்துக் கொண்டு இருப்பதற்குக் காரணம் என்ன?
ஒரு நடிகைக்கு அழகு அவசியமாகும். அத்துடன் ஒரு நடிகைக்கு கச்சிதமான உடலமைப்பும் வேண்டும். அதனால் தான் நான் என் உடலைப் பெரும் சிரமப்பட்டு வீணாகச் சதை போட்டு உப்பி விடாமல் பார்த்துக் கொள்கிறேன். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் ஸ்விம்மிங் போகிறேன். நாட்டியப் பயிற்சி செய்கிறேன். ஒரு பெண்ணின் உடல் கச்சிதமாக இருக்க இவை பெரிதும் உதவுகின்றன.
தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் மாதவி, சில இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். இந்திப் படப் பிரவேசம் பற்றி அவரிடம் கேட்ட போது சொன்னார் ‘ஆயிரம் தான் சொல்லுங்கள், இந்திப் படங்களில் நடிப்பதென்பதே தனி அலாதி. பணம் நிறைய வரும் என்பது ஒரு புறம். ஒரே ஒரு இந்திப் படத்தின் மூலமே ஒருவர் அகில இந்திய நடிகையாகவோ அல்லது நடிகராகவோ ஆகிவிட முடியும். உதாரணத்துக்கு டிம்பிளை எடுத்துக் கொள்வோம். அவர் பாபி என்னும் ஒரே படத்தின் மூலம் அகில இந்தியப் புகழ் அடைந்து விட்டார். மீதி எந்த இந்திய மொழிப் படங்களிலும் அம்மாதிரி யாராலும் புகழடைய முடியவே முடியாது. அகில இந்திய நட்சத்திரமாக மின்ன வேண்டுமென்றால், அதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது இந்திப் படங்களில் நடிப்பதாகும்.’
பேட்டி – ம.வெ.சதாசிவன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...