டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ரஜினி உட்கார்ந்த நாற்காலி

சிறந்த கலைஞர்கள் திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசினால் வழங்கும் பரிசளிப்பு விழா கலைவாணர்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:10 pm

உமா ஷக்தி.

Story image

சிறந்த கலைஞர்கள் திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசினால் வழங்கும் பரிசளிப்பு விழா கலைவாணர் அரங்கில் கவர்னரின் ஆலோசகர் திரு.டி.என்.லட்சுமி நாராயணன் தலைமையில் நடைபெற்ற போது –

ஸ்ரீகாந்த், லட்சுமி, ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, பேபி சுதா, டைரக்டர் துரை, ஜெயகாந்தன் (வரவில்லை), கே.பாலசந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், ஒளிப்பதிவாளர்கள் திவாரி, நல்லுசாமி, பின்னணிப் பாடகர்கள் வாணி ஜெயராம், மலேஷியா வாசுதேவன், கவிஞர் முத்துலிங்கம் ஆகியோர் பரிசு பெற்றனர்.

கவர்னரின் ஆலோசகர் தமது தலைமையுரையில், ‘இப்போது தரமான படங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறதென்றும், இது தொடர்ந்து நீடிக்க வேண்டு’மென்றும் குறிப்பிட்டார்.

கவர்னர் பட்வாரி பேசுகையில், கால மாற்றத்தையும் மக்களின் ரசிகத் தன்மையையும் கருத்திற்கொண்டு சிறந்த படங்களைத் தயாரிக்கக் கேட்டுக் கொண்டார்.

டைரக்டர் புல்லையா, தமிழ்ப்படவுலகில் தான் போட்ட அஸ்திவாரத்தை இன்று வரை சிவாஜி கணேசன் காப்பாற்றி வருகிறார் என்றார்.

தென்னிந்திய நடிகர் சங்க சார்பில் கலந்து கொண்ட சிவாஜி கணேசன் சொன்னார் : இதுவரை இது போன்ற பட விழாக்களுக்கு என்னை அழைத்ததில்லை! தமிழ்ப் படவுலகை இளங்கலைஞர்கள் சிறப்பாக்குவார்கள் என்று நம்புகிறேன்.’

கவர்னரின் காலில் விழுந்து ஆசிபெற்றார் லட்சுமி.

ரஜினிகாந்த், அவருக்காக பின்வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்த நாற்காலியில் உட்காராமல் முன் வரிசையில் லட்சுமிக்கும் ஸ்ரீப்ரியாவுக்கும் இடையில் இருந்த நாற்காலியில் போய் ‘லொடுக்’கென்று உட்கார்ந்து கொண்டார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.