டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

உமா ஷக்தி.

மார்ச் 12. இரவு மணி இரண்டு. மகேந்திரனின் ‘ஜானி’ படத்தின் படப்பிடிப்பு மவுண்ட் ரோடில் விடிய விடிய நடந்து கொண்டிருந்தது.

காமிராமேன் அசோக்குமார் மேற்பார்வையில் காமிரா அஸிஸ்டெண்டுகள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.

அந்தப் படத்தில் நடிக்காவிட்டாலும், அசோக்குமாரின் அசிஸ்டெண்ட் என்ற ரீதியில் இஞ்ச் டேப்பைக் கையில் வைத்துக் கொண்டு குறுக்களவு-பரப்பளவை அளந்து கொண்டிருந்தார் சுஹாசினி. (சாருஹாசனின் மகள்) ‘ஹாசினி, ஹாசினி’ என்று அந்த யூனிட்டில் இருந்த பலர் அபிமானமாய் அவரிடம் பேசிக் கொண்டிருந்தனர். லேசான ஆண்பிள்ளைத்தனம் தவிர்க்க முடியாமல் அவரிடம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

சிறிது ஓய்வு கிடைத்தபோது மகேந்திரன் சொன்னார்.

‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படம்தான் என் முதலும் கடைசியுமான படம் என்று சுஹாசினி சொல்லியிருக்கிறார். படப்பிடிப்பின் போது பார்த்தேன். எத்தனை வேகமாக முகபாவங்களை மாற்றுகிறார்! இப்போது பார்த்தால் ஜஸ்ட், சாதாரணமாகத் தெரியும் அந்த முகம், ‘டேக்’கின் போது எத்தனை அற்புதமான முகபாவங்களைக் காட்டுகிறது என்று அதிசயித்துப் போனேன். நடிப்பு என்பது கமல் குடும்பத்தின் ரத்திலேயே ஊறிப்போன விஷயமாக எனக்குப் படுகிறது. மொத்தத்தில் சுஹாசினி ஒரு ‘பொம்பளை கமல்!’

உங்களைப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருந்தார் மகேந்திரன்’ என்று சுஹாசினியிடம் சொன்ன போது, ஓர் அர்த்த புஷ்டியுடன் சிரித்தார் சுஹாசினி.

‘நீங்களும் கமர்ஷியல் பக்கம் சாய்ந்து விட்டீர்கள் போலிருக்கிறதே’ என்று மகேந்திரனிடம் கேட்டேன்.

‘யெஸ். கமர்ஷியல் படம்தான். ஆனால் மகேந்திரன் ஸ்டைல்!’ என்றார் சிரித்துக் கொண்டே.

-ரமணி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.