படத்தின் வெற்றி தோல்வி – டைரக்டர் சம்பந்தம் விமரிசிக்கிறார்
தோல்வியடைந்தால் அதற்கு முழுப் பொறுப்பு டைரக்டர் மட்டுமே!


தோல்வியடைந்தால் அதற்கு முழுப் பொறுப்பு டைரக்டர் மட்டுமே!
டைரக்டருக்கு ஒவ்வொரு முதல் படமும் – முதல் குழந்தை. அதை உருவாக்கும் காலத்தில், சில ஐந்தாம் தர மனிதர்கள், அர்த்தமற்ற செண்டிமெண்டுகளை பரப்புவதால் – தயாரிப்பாளர்களும ந்தப் படமும் டைரக்டரின் உழைப்பும் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பதை திரு.பொன் அருணாச்சலம் ‘தாமிரபரணி ஆற்றங்கரையில்’ நன்றாக விவரிக்கிறார்.
படப்பிடிப்பை முடித்துவிட்டால் ஆறு மாதத்தில் இறக்க வேண்டிவரும் என்று யாரோ கூறியதை நம்பி – ஷூட்டிங்கை நிறுத்தி விடுகிறார் தயாரிப்பாளர். வேறென்ன செய்வார்? படமெடுத்து தலைவலி, திருகுவலியுடன் போய் சேருவதை விட படமெடுக்காமல் நிம்மதியாகப்போய் சேரலாம் என்றுதானே எண்ணுவார்! முரண்பாடான சில சினிமா செண்டிமெண்டுகளை மிகவும் நேர்த்தியாக நையாண்டி செய்கிறார் கதாசிரியர்.
வளரும் டைரக்டர்கள் தோல்வியைக் கண்டு நிலைகுலையக் கூடாது. வெற்றியக் கண்டு நிலைமாறவும் கூடாது என்று மூத்த கலைஞர் ஒருவர் எனக்கு கூறியதே நினைவு வருகிறது.
டைரக்டக்டர்கள் கதாநாயகனாகவோ வில்லனாகவோ (இக்கதையில் வருவதுபோல) மாறக்கூடாது. அவர்கள் எப்போதும் டைரக்டர்களாகவே இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதை இந்தக் கதையில் வெளிப்படுத்தியிருக்கிறார் கதாசிரியர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...