ஒரு காலத்தில் நான் ஹீரோ – நடிகர் சுமனிடம் மினி பேட்டி
95 சதவிகிதம் காதல் தோல்வியைத் தான் அடைகிறது. பெண்கள் தான் காதலை பொழுதுபோக்குக்காக விரும்புகிறார்கள்.


காதல் திருமணத்தை பற்றி என்ன நினைக்கீறீர்கள்?
95 சதவிகிதம் காதல் தோல்வியைத் தான் அடைகிறது. பெண்கள் தான் காதலை பொழுதுபோக்குக்காக விரும்புகிறார்கள்.
உங்களுக்கு தர்மசங்கடமான நிலைமை ஏற்பட்டதுண்டா?
நான் பங்ஷனுக்குப் போகும் போதெல்லாம் என் மம்மி ஒயிட் மேட்ச் உடைகளையே அணிந்து கொள்ள வற்புறுத்துவார்கள். எனக்கு கலர் யூனிபாரம்தான் ரொம்பவும் பிடிக்கும். அந்த நேரத்தில்தான் தர்மசங்கடமான நிலைமை ஏற்படும்.
நீங்கள் நினைத்த காரியம் நடக்காவிட்டால் உங்கள் மூடு எப்படி இருக்கும்?
நினைத்தது எல்லாம் இதுவரை நடந்துதான் வருகிறது. நடக்காவிட்டால் அப்பவே மறந்துவிடுவேன்.
சிபாரிசு செய்வது நல்லதா?
சிலருடன் நடித்தால் சக்ஸஸ் ஆகிவிடுவதுண்டு. அதனால் அந்த நபரைப் படத்தில் போடுங்கள் என்று சொல்வதில் தப்பில்லை. ஆனால் கம்பல் செய்யக் கூடாது.
நீங்கள் நடிப்புத் துறையில் ஈடுபடாமல் இருந்திருந்தால் இப்போது என்ன செய்து கொண்டு இருப்பீர்கள்?
ஆர்ட்ஸ் க்ரூப்பில் சேந்திருப்பேன். இல்லை என்றால் என் அம்மா மாதிரி லெட்சரராக ஆகி இருப்பேன்.
தங்களுக்குப் பிடித்த விளையாட்டு எது?
ஹாக்கிதான். சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கிரிக்கெட் மாட்ச் நடக்கும் போது ஒருமுறை கூட அந்த பக்கம் நான் சென்றது கிடையாது. காமெண்ட்ரியும் கேட்கமாட்டேன். ஆனால் ஹாக்கி மேட்ச் நடந்தால் முதல் ஆளாக நிற்பது நான் தான். பள்ளியில் படிக்கும் போது தொடர்ச்சியாக நான்குமுறை ஹாக்கி டீமில் விளையாடி பரிசு வாங்கி இருக்கிறேன்.
நடிப்புத்துறை, கேம்ஸ் இந்த இரண்டில் எதை ரொம்பவும் லைக் பண்ணுகிறீர்கள்?
கேம்ஸ்தான். நேரு ஸ்டேடியத்தில் ஹாக்கி நடந்தால் ஏன் கை சும்மா இருக்காது. நாமும் மட்டையைப் பிடித்து கொண்டு மைதானத்தில் குதிக்கலாமா என்றுதான் நினைப்பேன்.
தொகுப்பு – சிவாஜி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...