என் காதலர்கள் – ரேகா
என்னுடைய முக அமைப்புகள் அப்பாவின் (ஜெமினி கணேசன்) முகத்தைப் போலவே இருக்கும். குறிப்பாக


என்னுடைய முக அமைப்புகள் அப்பாவின் (ஜெமினி கணேசன்) முகத்தைப் போலவே இருக்கும். குறிப்பாக முகவாய்க்கட்டை அசல் அப்பாவுடையது. அப்பாவுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை. இருவரும் வாழ்க்கையை சுகமாக முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள். அழகை ரசிப்போம். அகம்பாவமும் அவ்வப்போது வரும்.
முன்பெல்லாம் அப்பா மீது கோபம் வரும். எங்களை கவனிக்காமல் விட்டு விட்டாரே என்ற வெறுப்புத்தான் ஆனால் அவரது மனத்தை நான் நன்றாக அறிவேன். அப்பாவின் அன்பு இப்போது கிடைத்து விட்டதில் அலாதி ஆனந்தம்.
பட உலகில் எனக்குப் பரபரப்பான அனுபவங்கள் ஏற்பட்டன. அஞ்சனா சபர் படத்தில் பிஸ்வஜித்துடன் முத்தக் காட்சியில் நடித்தது அதன் ஆரம்பம். அந்தப் படத்தின் வெற்றிக்காக எனக்கு அவர்கள் கொடுத்த பார்ட்டியில் அடேயப்பா எத்தனை பாட்டில்கள்! எனக்கு ஒரே பயமாகப் போய்விட்டது!
எனக்குப் பெரிய புகழ் தந்த படம் ‘சவான் பாதோன்’. சாதாரணமாக உடையணிந்து நடித்தும் ‘கவர்ச்சிக்காரி’ என்று என்னைப் பற்றி பேசினார்கள். நல்ல நடிகையாக விளங்குவதற்கு அழகு, கவர்ச்சி மட்டுமே முக்கியம் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு அழகைவிட அக அழகே முக்கியம். நல்ல நடிகையாக விளங்க நிறைய வாழ்க்கை அனுபவங்கள் வேண்டும். இதுவரை நான் பல மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன். பல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
சிறு வயதில் ஜிதேந்திரா மீது எனக்குப் பிரியம் ஏற்பட்டது. ஆனால் அத்துடன் சரி. வினோத் மெஹரா என்னை காதலித்தார். அவரைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள நான் விரும்பவில்லை. மெளஷுமி சாட்டர்ஜியுடன் நெருக்கமாக வர் இருந்ததை என் கண்ணால் கண்ட பிறகும் அவரை நான் விரும்ப முடியுமா?
கிரன் குமாருடன் பழகினேன். அவருடன் பொழுது போக்கினேன். அதிகமான நெருக்கம் கிடையாது.
பழைய கதைகள் கிடக்கட்டும். இப்போது என் காதலன் யார்? இப்போது நான் ஒருவரைக் காதலிக்கிறேன். அவரும் என்னை மனப்பூர்வமாக விரும்புகிறார். ஆனால்? அவர் ஏற்கனவே திருமணமானவர். அவரை எப்படிக் கல்யாணம் செய்து கொள்ள முடியும்?
(நன்றி : நியூ டெல்லி)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...