எனக்குப் பிடித்தவர்கள்! சுமலதா
கமலஹாசன் – நான் ஏழாவது படிக்கும் போது இவருடைய படத்தை முதல் நாளிலேயே பார்த்து விடுவேன்.


கமலஹாசன் – நான் ஏழாவது படிக்கும் போது இவருடைய படத்தை முதல் நாளிலேயே பார்த்து விடுவேன். ஒரு படத்தை கூட இதுவரை மிஸ் பண்ணியது இல்லை. இருநிலவுகள் படத்தை மட்டும் நாலு தடவை பார்த்தேன். கமலின் நடிப்பு இந்தப் படத்தில்தான் மிகச் சிறப்பாக இருந்தது.
ஜெயசுதா – தெலுங்குப் படவுலகில் நல்ல ஆர்ட்டிஸ்ட் என்று என்னால் இவரை நிச்சயம் சொல்ல முடியும். ஒரு நடிகை என்றே சொல்ல முடியாது. அந்த அளவுக்கு ஃப்ரீயாகப் பழகக் கூடியவர். தலைக்கனம் இல்லாதவர்.
ஸ்ரீதேவி – இன்றைய இளம் தமிழ் நடிகைகளில் ஸ்ரீதேவி ஒரு துடிப்பான நடிகை. கேரக்டருக்கு உயிர் ஊட்டுபவர். இவரை படத்தில்தான் பார்த்திருக்கிறேன்.
ரஜினிகாந்த் – இவரை எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. ‘முரட்டுக் காளை’ படப்பிடிப்பில் லைட்பாய் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றதை நான் நேரிலே பார்த்தேன். இப்படிப்பட்ட ஒரு நல்ல நடிகரை சினி ஃபீல்டில் பார்ப்பது ரொம்பவும் அபூர்வம். வயதுக்கும் அனுபவத்துக்கும் மரியாதை கொடுப்பவர் இவர்தான்.
பிரேம்நசீர் - இவர் செட்டில் இருந்தால் காலை முதல் மாலை வரை டல்லே ஏற்படாது. ஜோக் சொல்லிச் சொல்லிச் சிரிக்காதவர்களையும் சிரிக்க வைப்பார். ஜாலியான மனிதர்.
பேட்டி : மு.சிவாஜி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...