/

ரவீந்தரின் காதலி

மொசுமொசுவென்று தலைமுடி. துடிக்கும் கருப்புத் திராட்சைக் கண்கள். ட்ரூப்பிங் மீசை. ப்ளூர் கலர் ஜீன்ஸ்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:13 pm

உமா ஷக்தி.

மொசுமொசுவென்று தலைமுடி. துடிக்கும் கருப்புத் திராட்சைக் கண்கள். ட்ரூப்பிங் மீசை. ப்ளூர் கலர் ஜீன்ஸ். குறும்பு வார்த்தைகள் சொல்லும் பனியன். இதுதான் ஒரு தலைராகம் ரவீந்திரன். அவரது நடை, பேச்சு எல்லாவற்றிலுமே இன்னும் கல்லூரி மாணவன் என்ற சாயல்தான் அதிகம் தெரிகிறது. உதடுகள் சிரிப்போடு சிகரெட்டைச் சுவைக்க, தனது மாணவப் பருவத்தை அசை போடுகிறார் இந்த தலைவர்.

என் வாழ்க்கையிலேயே அதிகமாக இருந்த இடம் பூனாதான். கேரளாவிலே ஸ்கூல் படிப்பை முடிச்சிட்டு இங்கு வந்தேன். அதுவும் 1974-75 என் லைஃபில் ஒரு திருப்புமுனை. பி.காம் படிக்கிற சமயம் காலேஜில் என் பெயரே ஹீரோதான். படிக்கிறேனோ இல்லையோ எப்பவும் என்னைச் சுத்தி ஒரு கூட்டம் இருக்கும். எனக்கு எதையுமே ஃப்ராங்காகப் பேசறதுதான் பிடிக்கும். காலேஜிலே ஒரே கலாட்டாதான். எந்த வாத்தியாரும் கிளாஸுக்கு வந்தா எங்கிட்ட முக்கியமாக அதிக ஜாக்கிரதையாக இருப்பாங்க. ஐவாஸ் நொடோரியஸ் நோ டவுட். பட் எல்லோரும் என்னை விரும்பினாங்க.

‘ஒரு தலை ராகம்’ படத்துக்காக நான் டான்ஸ் ஆடும்போது எனக்கு இந்த பூனா காலேஜ் தான் ஞாபகத்துக்கு வரும். எனக்கு எப்பவுமே நண்பர்கள் ஜாஸ்தி. முக்கியமாக மலேசியா அதிகம். அவங்க கிட்டே இன்னும் பல வெரைடி கத்துக்கிட்டேன்.

பல பெண்களோட பழகினாலும், நான் யாரையும் காதலிக்கலே. ஆனா நான் சினிமாவுக்காக மதராஸ் வந்தப்போ தற்செயலா ஒரு அயல் நாட்டுப் பெண்ணைப் பார்த்தேன். அவ ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் தான். நாங்க எல்லா விஷயத்தையும் பத்தி பேசுவோம். எப்பவுமே அவ ‘கலகல’ ன்னு சிரிச்சுக்கிட்டே இருப்பா. இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டு காதலிச்சோம். ஆனா விதி விளையாடிடுச்சு. அவ உடம்பு சரியில்லாதபோது என்னைவிட்டு போயிட்டா…ஆமா ஷி இஸ் டெட். என் வாழ்க்கையிலே பெரிய மாறுதல் அவள் தான். இப்பவும் அவளை நினைச்சுகிட்டா என்னால உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியலே. ஓ! அந்த இனிய நாட்கள் இனிமே வருமா?’

சினிமாவுக்காக ரவீந்தர் என்று மாற்றிக் கொண்டாலும், இவரது இயற்பெயர் தம்பி அரியாஸ்.

பேட்டி : சிக்கி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.