/

மலைக்க வைத்தார் ‘மலேசியா’

சமீபத்தில் வேலூரில் எனது உறவினரின் திருமணத்திற்குப் போயிருந்தேன். திருமண ரிசப்ஷனுக்கு விநாயக

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:11 pm

உமா ஷக்தி.

சமீபத்தில் வேலூரில் எனது உறவினரின் திருமணத்திற்குப் போயிருந்தேன். திருமண ரிசப்ஷனுக்கு விநாயக முதலியார் சத்திரத்தில் மலேசியா வாசுதேவனின் மெல்லிசைக் கச்சேரியை ஏற்பாடு பண்ணியிருந்தார்கள்.

ஏதோ இசை நிகழ்ச்சிக்கு புக் பண்ணினார்கள். வந்தோம். பாட்டுப் பாடினோம் என்றில்லாமல் அந்த இசைக் கலைஞர் செய்த செயல் உள்ளத்தைத் தொடும் வண்ணம் அமைந்திருந்தது. தனது சொந்தச் செலவில் மணமகனுக்கு வாழ்த்து மடல் அச்சிட்டு அதனைக் காலையிலேயே திருமண விழாவில் விநியோகிக்க ஏற்பாடு செய்தார். மாலையில் இசை நிகழ்ச்சி துவங்குவதற்கு முன் அழகாக பிரேம் போட்ட அவ்வாழ்த்து மடலை மேடையில் படித்து மணமக்களுக்கு வழங்கினார்.

வாழ்த்து மடல் கொடுப்படஹ்ற்கு மேடைக்கு அருகே அமைக்கப்படிருந்த அலங்காரமான கிளிக் கூண்டிற்கு இறங்கி வர வேண்டும். படிகளிலெல்லாம் கூட்டம்! மேடையிலிருந்து இறங்குவதற்கும், வாழ்த்து மடல் கொடுத்து விட்டு மீண்டும் மேடையில் ஏறுவதற்கும் மிகவும் சிரமப்பட்டார். பக்கத்திலிருந்த ஒருவரின் தோளில் கை போட்டுத் தாங்கி எம்பி மிகவும் தொல்லைக்குள்ளானார்.

அப்போது நான் எனது பக்கத்திலிருந்து என் உறவினரிடம் கமெண்ட் அடித்துச் சிரித்தேன். அதே வார்த்தைகளை மலேசியா வாசுதேவனே மைக்கில் சொல்லவும் எனக்கு மெய்சிலிர்த்தது. அவர் சொன்ன வார்த்தைகள் இதுதான்:

‘கொஞ்சம் பெரிய உட்ம்பு அதைத் தூக்கிக் கொண்டு மேலே ஏறுவது சிரமமாக இருக்கிறது’

ஆனால் அதே பெரிய உடம்பை வைத்துக் கொண்டு அவர் ஒவ்வொரு பாடலின் போதும் இரு கைகளை உயர்த்தியும் குறுக்கிய்ம் வளைந்தும் நெளிந்தும் இசைக் கலைஞர்களுக்குச் சைகைகள் கொடுக்கும்போது ‘மனுஷர் இந்த உடம்பை என்னமாய் ஆட்டி வைக்கிறார்!’ என்று வியப்படைந்து போனேன்.

-ராம்குமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.