மனோர(ம்)மா!
‘பாப்பாவை (மனோரமாவை அவர் அப்படித்தான் அழைக்கிறார்) என் அம்மாங்கறதைவிட ஃப்ரெண்டுன்னே


அம்மா என்கிற முறையில் மனோரமா எப்படி? அவரது மகன் பூபதியிடம் கேட்டபோது –
‘பாப்பாவை (மனோரமாவை அவர் அப்படித்தான் அழைக்கிறார்) என் அம்மாங்கறதைவிட ஃப்ரெண்டுன்னே சொல்லலாம். ஒரு உண்மையான தோழி. சுருங்கச் சொன்னா பாப்பா ஒரு ‘அப்சர்வண்ட் மதர்’
பாப்பாவோட வயத்துல கருவா இருந்ததிலேர்ந்து நான் வளர்ந்ததே நாடக மேடையிலேதான். பாவம் பாப்பா, பத்தாவது மாசம் வரையிலும் நாடகங்கள்ளே நடிச்சிக்கிட்டே இருந்துச்சாம். அப்புறம் நான் பொறந்தப்போ கொஞ்ச காலம் நடிக்க முடியாமல் போயிடுச்சு. அதுக்கப்புறம் பழையபடி நடிக்க ஆரம்பிச்சிடுச்சு. வீட்டுலே தனியா உட்டுட்டுப் போக முடியாததானாலே என்னையும் தூக்கி இடுப்புலே போட்டுக்கிட்டு நாடகத்துக்கு போகும் பாப்பா.
அப்பவெல்லாம் ஸ்டேஜிலே ஒரு பக்கமா நின்னுகிட்டு நான் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருப்பேன். நாடகத்துலே பாப்பா சிரிச்சா நானும் சிர்ப்பேன். அது அழுதிச்சின்னா எனக்கும் பொத்துக்கிட்டு வந்துடும்.
அப்படித்தான் ஒரு தடவை நாடகத்திலே ஒரு வில்லன் பாப்பாவை அடிக்கிற மாதிரி சீன். அப்போ எனக்கு மூணு வயசு இருக்கும். வழக்கம் போல சைடுலேயிருந்து நான் நாடகத்தைப் பார்த்துக்கிட்டு இருந்தேன். ‘பளார்’ன்னு ஒரு அறை. பாப்பா கன்னத்துல விழுந்திச்சு. பார்த்துக்கிட்டு இருந்த எனக்குக் கண்ணெல்லாம் கலங்கிப் போய், பொல பொலன்னு தண்ணி வர ஆரம்பிச்சிடிச்சு. பாப்பா எப்போ உள்ளே வரும்னு காத்துக்கிட்டு இருந்து, வந்ததும் அதை அப்படியே கட்டிக்கிட்டு ‘ஓ’ன்னு வாய்விட்டு அழ ஆரம்பிச்சிட்டேன். பாப்பா என்னைத் தட்டிக் குடுத்து, சமாதானப்படுத்தி, ஏண்டா ‘ஏண்டா கண்ணு அழறே?’ன்னு கேட்ட்சிச்சி. பாப்பா அவன் ஒன்னை அடிச்சான் இல்லே?ன்னு துக்கத்தோட கேட்டேன். ‘சீச்சி, அதெல்லாம் சும்மா தமாஷுடா கண்ணு. பாப்பா அழறேனா பார். பாப்பாவுக்கு வலிக்கவே இல்லையே?’ அப்படீன்னு சிரிச்சுக்கிட்டே சொல்லிச்சு.
அந்தச் சிரிப்பும் ஒரு நடிப்புதாங்கிறது எனக்கு அப்போ தெரியாததுனாலே நானும் சேர்ந்து சிரிச்சேன்.
பேட்டி - வினோத்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...