ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!முதல்வா் நாளை குமரி வருகை!வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நீ ஏன் அழிந்த கோலமானாய்?

வானத்திலிருந்தல்ல பூமியிலிருந்து உதிர்ந்த புதுமை நட்சத்திரமே!

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:11 pm

உமா ஷக்தி.

வானத்திலிருந்தல்ல

பூமியிலிருந்து

உதிர்ந்த

புதுமை நட்சத்திரமே!

உதயங்கள் உன்னுடன்

ஒப்பந்தம் செய்யும் வேளையில்

நீயேன்

அஸ்தமனத்திடம் போய்

அடைக்கலம் கேட்டாய்?

பூவிரல்களால்

எம் இதய வாசலில்

அழியாத கோலங்கள்

போட்டுவிட்டு

நீயேன்

அவசர அவசரமாய்

அழிந்த கோலமானாய்?

எத்தனையோ

இளைஞர்களின்

கனவில் வந்தவளே!

எவருஐய கனவிலாவது – உன்

சோகக் கதையைச்

சொல்லியிருக்கக் கூடாதா?

வேலியைத் தாண்டியிருந்தால்

ஒருவேளை

வெள்ளாடு

பிழைத்திருக்கலாம்.

வாழ்வதற்கு

ஒரு வீடு

தேடியபோது

பொல்லாத

ஒரு உலகம்

உலகத்திலிருந்தே

உன்னை வழியனுப்பி

வைத்ததோ?

நிழல் நிஜமாகிறது

என்று நினைத்தாய்

அப்பாவிப் பெண்ணே!

நிஜம் நிழலானதாலா

மரணத்தை அணைத்தாய்?

துன்பம்

பெண்குலத்தின்

தொடர்கதை

அதில்

நீயும்

விடைதெரியாமல்

போன ஒரு

விடுகதை

(மு.மேத்தா எழுதிய ‘அவர்கள் வருகிறார்கள்’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.