சிவாஜிராவ் To ரஜினிகாந்த்
ஹலோ…மை டியர்ஸ். உங்க ரஜினி கதாகாலட்சேபம் பண்றதாக நினைக்காதீங்க.


(சினிமா எக்ஸ்பிரஸ் 1.11.1980 தீபாவளி மலரில் ஆரம்பித்த தொடர்)
‘உன் கடமையைச் செய். பலன்களைப் பற்றிக் கவலைப்படாதே’.
ஹலோ…மை டியர்ஸ். உங்க ரஜினி கதாகாலட்சேபம் பண்றதாக நினைக்காதீங்க.
குடுட்சேத்ரா வார் ஃபீல்டிலே அர்ஜுனனுக்குக் கிருஷ்ணன் உபதேசம் பண்ணினான். அதையே பெங்களூர் ராமகிருஷ்ணா மிஷன் ஹைஸ்கூலிலே ராணஜிராவ் சிவாஜிராவ் கெய்க்வாட் ஜாதென்னருக்கு மாஸ்டர் ராமகிருஷ்ண மகாராஜாவும் சொன்னார்.
மாஸ்டருக்கு சிவாஜிராவ் ரொம்பப் பிடிக்கும். கேட்ட கேள்விகளுக்கு அவன் ‘டக் டக்’னு பதில் சொல்லி விடுவான். அவன் ஸ்கூலிலே விவேகானந்த பாலக சங்கம் குரூப்பைச் சேர்ந்தான். அப்போ அவனுக்கு வயசு பதினைந்து இருக்கும்.
அந்த சுலோகம் இன்னிக்குவரை ரஜினிகாந்த் மனசிலே இருக்கு. இப்போ இவர் படிக்கலே. நடிக்கிறார். சூப்பர் ஸ்டார் குரூப்பிலே இருக்கிறார். இப்போ இவருக்கு வயசு எக்ஸாக்ட்லி முப்பது.
Date of Birth தெரியணுமா? டிசம்பர் 12, 1950.
ரஜினியோட புது வீட்டைச் சுற்றி, எப்பவும் ஒரு பெருக்கூட்டமே இருக்கும். புரொட்யூசர்ஸ், ஃப்ரெண்ட்ஸ், ரஜினி ரசிகர் மன்றத்தினர், தம்புராவோடத் தெலுங்கு நாடோடி ஜோசியக்காரங்க, இன்னும் யார் யாரோ….!
இந்த ஜோசியக்காரங்களுக்கு ரஜினிக்கு ஜோசியம் சொல்றதிலே கூட விருப்பம் இல்லை. அவரோட சேர்ந்து ஒரு குரூப் போட்டோ எடுத்துக்கணும்!
அந்தக் கூட்டத்தை ரஜினியாலே அவாய்ட் பண்ண முடியாதில்லே. ஏன்னா, He is SUPER STAR! The star is equal to public property. இல்லையா!
உங்க ரஜினிகாந்துக்குத் தனிமைதான் பிடிக்கும். ஹூட்டிங்கிலே ரெஸ்ட் கிடைக்கும் போது கூட்டம் சேர்த்துக்க மாட்டார். அரட்டை அடிக்க மாட்டார். சலசலப்பு வாயர்களாலே சச்சரவுதான் மிச்சம்! தனியாய்ப் போயிடுவார். கையைத் தலைக்குக் கொடுத்துட்டு காலை நீட்டிப் புல் தரையிலே படுத்துக்குவார். ஸ்டூடியோவுக்குப் போகும் போதுகூட செல்ஃப் டிரைவிங்தான்! நீங்க கூடப் பார்த்திருக்கலாமே ரஜினியை T M U 5004 வெள்ளை Fiat லே?
பின் சீட்லே ப்ளாஸ்கிலே இருந்து ட்ரிபிள் ஃபைவ் சிகரெட் வரைச் சுமந்துட்டு ஒரு கால்-பாய் இருப்பான். காரிலே ஏறி ரஜினி ட்ரைவ் பண்ண ஆரம்பிச்சிட்டா கால்-ப்ரெண்ட், கால் – மானேஜர் ஆல் இன் ஆல் அவன் தான்! குள்ளமா, குண்டா ரஜினிக்கு ஆப்போசிட் கலரிலே இருப்பான். சிவப்பா! அவன் பேரு கனகராஜூ. பட். ரஜினி அவனை அப்படிக் கூப்பிடுறதில்லே.
….ப்ளீஸ் ஜஸ்ட் ஏ மினிட் வெயிட்….
ஒரு கட்டு லெட்டர்ஸோட கிரி வர்றாரு. அவர் என்னோட பி.ஏ.க்களில் ஒருத்தர். அவர்கிட்டே கொஞ்சம் பேசி அனுப்பிடுறேன்.
இடையிலே இதைப் போல ஸம் டிஸ்டர்ப்ஸ் எல்லாம் வரும். நீங்களும் கொஞ்சம் பொறுமையாதான் இருக்கணும்.
‘என்ன கிரி?’
‘ரசிகர்களுக்குப் போட்டோஸ் அனுப்பணும்.’
‘நிறைய ஃபோட்டோஸ் இருந்ததே!’
‘உங்க ஆட்டோகிராப் போட்டோஸ் குறைவா இருக்கு.’
‘I have already signed a lot of photos. சரி.’
கொண்டா…க்விக்….
ரஜினிக்கு டெய்லி நூற்றுக்கணக்கா லெட்டர்ஸ் வருது. அதிகமா வர்றதாலே சீரியல்படி சொன்னா ஃபர்ஸ்ட் மெஜூரா டிஸ்ட்ரிக் செகண்ட் ட்ரிச்சி. தேர்ட் ராம்னாட், டின்னல்வேலி. அனேகமா இந்த லெட்டர் கரஸ்பாண்டிங்க்தான் கிரிக்கு பெரிய வேலையே!
ரசிகர்களை ஏமாற்ற ரஜினி ஒரு போதும் விரும்ப மாட்டார். ரஜினியைப் பார்த்துட்டா எவ்வளவு ஆர்வமா ஓடி வர்றாங்க. கூவறாங்க. விஷ் பண்றாங்க! பதி விஷ் பண்ண ரஜினிக்கு மூட் தேவை இல்லே.
அமெரிக்கன் பிரஸிடெண்ட் எலக்ஷனிலே நிக்கிற காண்டிடேட்ஸுக்கு வோட்டர்ஸோட ஷேக் ஹாண்ட் பண்ணிப் பண்ணி, கைகளே வீங்கிப் போயிடுமாம். ரசிகர்களுக்கு விஷ் பண்றதாலே ரஜினிக்கு அப்படி ஆகிடப் போறதில்லையே?
பொதுவா, ரசிகர்களே வோட்டர்ஸ். ஸ்டார்ஸெல்லாம் ஸ்டார்ங்கற பொசிஷனுக்கு எலெக்ட் பண்ணியிருக்கிற அந்த வோட்டர்ஸை ரஜினியாலே ஒதுக்கிட முடியுமா?
ஓ…கே…..என்ன சொல்லி வந்தேன்?...ம்…எஸ்…..கனகராஜ்!
இன்னும் வரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...